பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 இருவரும் இணைந்த அக்கூட்டத்தைக் காணப் பெருங் கூட்டம் கூடி இருந்தது. நான் இன்றே போல்க நும்புணர்ச்சி' என்று சங்ககாலப் புலவன் வாக்கில் இருவரையும் வாழ்த்தி வந்தவர் அனைவரையும் வரவேற்றேன். அந்த இணைந்த இரு உள்ளங்களும் பிறகு என் பணிகள் பலவகையில் விரிந்த போதும் உள்ளத்தாலும் உற்ற பல செயல்களாலும் ஆக்கம் தந்து உதவின என்பதை இங்கே காட்டக் கடமைப் பட்டுள் ளேன். அந்த அடிப்படையில் இன்றைய ஆட்சியினரும் நான் அண்ணாவின் நண்பன் என்ற காரணத்தால் எங்கள் கல்வி அறம் வளரப் பலவகையில் உதவுவதை எண்ணிப் போற்று கின்றேன். (1938 நான் காஞ்சியில் தமிழாசிரியனாக இருந்து, மாவட்டக் கழகத் தேர்தல் களத்தில் இறங்கியபோது பேரறி ஞர் அண்ணா அவர்கள் என்னுடன் மாட்டு வண்டியில் வந் தும் பிறவகையிலும் என் தேர்தலுக்கு உதவி, வெற்றி காணச் செய்ததை என் காஞ்சி வாழ்க்கை என்னும் நூலில் குறிப் பிட்டுள்ளேன்) உயர்திரு பக்தவத்சலம் அவர்கள் பள்ளிக்கு இருமுறை வந்து வாழ்த்தியதோடு அடிக்கடி நான் காணும்போதெல்லாம் பள்ளியின் வள ர் ச் சி கே ட் டு மகிழ்ந்து பாராட்டுவார்கள். எங்கோ சென்றுவிட்டேன். வாலாஜாபாத் பள்ளி இன்று மேநிலைப்பள்ளியாகச் சிறந்து வளர்ந்துள்ளது. . "எம். லிட் பட்டம் பெற்றபின் பலர் என்னை டாக்டர் பட்டத்திற்குப் பதிவு செய்து கொள்ளச் சொன்னர்கள். சேதுப்பிள்ளை அவர்களும் வற்புறுத்தனர். எனவே பதிவு செய்து கொண்டேன். எனினும் மேலும் பயின்று பட்டம் பெறுவதில் என் மனம் செல்லவில்லை. "கற்பனவும். இனி அமையும்', என்ற மாணிக்கவாசகர் மொழி என்னை ஆட்கொண்டது. எனவே இந்த டாக்டர் பட்ட முயற்சி யைக் கைவிட்டேன். பின் நான் எழுதிய நூல்களுள் சில டாக்டர் பட்ட ஆய்வுக் கட்டுரைகளைக் காட்டிலும் சிறந்தமையின், அவற்றுள் ஒன்றை அனுப்பிவைக்கலாம் என அன்பர்கள் சொன்னார்கள். எனினும் அதையும் நான் செய் யவில்லை. கல்லூரிப் பணிகளுக்கு இடையில் சொந்த ஊரில்