பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சென்று நிலங்களைக் காண்பதும் வாலாஜாபாத் பள்ளியின் வளர்ச்சியினை நோக்குவதும் அப்படியே அங்கிருந்த இந்து மதபாடசாலையில் அப்பாவுடன் கலந்து உரையாடித் தங்குவதுமாக நாளைக் கழித்துவந்தேன். அதற்கிடை யில் அமைந்தகரையில் முயன்று 1949ல் எனக்கென ஒரு தனிக் குடிலினையும் அமைத்துக் கொண்டேன். நான் நடத்திய தமிழ்க்கலை யின் பெயரால் தமிழ்க்கலை இல்லம்' என அதற்குப் பெயரிட்டேன். சொந்தமாக, 1947ல் இடம் வாங்கி 1949ல் வீடு கட்டி, 1. 6. 49ல் குடியேறினேன். அவ் வீட்டினையும் திரு. பக்தவத்சலம் அவர்களே வந்து திறந்து வைத்தார்கள். அந்த வீட்டைக் கட்டி முடிந்த அனுபவமே பின் நான் சில வீடுகளைக் கட்டவும் பள்ளிக்கெனப் பல கட்டிடங்கள் கட்டவும் மிகவும் உதவிற்று. அதற்கு உதவிய வர் அன்று முதலில் நான் குடியிருந்த வீட்டிற்கு உரியவரான முருகேச நாயகர் அவர்கள். அவர்கள் கட்டுமான நுணுக்கங் களை யெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். என் புதிய வீட்டிற்கு வந்த பிறகு அமைந்தகரை, செனாய் நகர் பகுதியிலுள்ள பலர் எனக்கு அறிமுகமாயினர். அக் காலத்தில் புதிதாக அமைந்த அந்தக் செனாய்நகர்ப் பகுதி யில் கல்விக்கூடம் இல்லை என்ற ஒரு நிலை என் உள்ளத்தில் உறுத்திற்று, உடனே அதுபற்றி அன்பர்களிடம் கலந்து ஆவன செய்ய மேற்கொண்டேன். எங்கள் பேட்டையிலேயே உள்ள கொன்னூர் ரெட்டியார்’ எனப்பெயர் பெற்ற திரு. நாராயணசாமி ரெட்டியார் அவர்களை அணுகினேன். அவர் மகனார் நந்தகோபால் அவர்கள் உடனிருந்து உழைத்தார். விடுதலை ஆசிரியர் திரு. குருசாமி அவர்களும் உதவினார்கள். பிறகு நாங்கள் டாக்டர் சுந்தரவதனம் அவர்களை அணுகி, அக்குழுவிற்குத் தலைவராக இருக்க வேண்டினோம். அவர்களும் உளமுவந்து இசைந்தார்கள். பின் மற்றும் மூவரையும் உறுப்பினராகச் சேர்த்து 1860வது ஆண்டு சட்டப்படி பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டோம். அதுபோது பள்ளிக்குப் பெயர் வைப்பது பற்றிய புேச்சு