பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 எழுந்தது டாக்டர் மு. வ. அவர்கள் திரு.வி.க. பெயரை வைக்கலாம் என்று சொல்லி, அவர் பெயரால் முன் வசூல் செய்திருந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தொகையி னையும் கொடுத்து உதவினார்கள். அவர்தம் நூல்களுள் சிலவற்றின் வருவாயினைப் பள்ளிக்கு எழுதி வைப்பதாகவும் சொன்னார்கள். பிறகு அவர்களும் குழுவில் உறுப்பினரானார் கள். அந்த ஆண்டில் (1955) என் நூல் சீவகன் கதை, புதிதாக அமைந்த புகுமுக வகுப்பிற்குப் பாடநூலாக அமைந்தது. அதில் வந்த தொகையுள் பெரும்பகுதியாகிய ஐயாயிரத்தை யும் நான் பள்ளிக்குத் தந்தேன். டாக்டர் சுந்தரவதனம் அவர்கள் தம் பொருளை மிகுதியாகக் கொடுத்ததுடன் தம் உற்றார் உறவினரிடமிருந்தும் பெருந்தொகை வாங்கித் தந்தனர். (பின் தொடக்கப் பள்ளியினைத் தனியாகவே பிரித்து, அவர் பெயராலே நடத்தி வருகின்றோம்.) திரு. நந்தகோபால் அவர்களும் பொருள் உதவியதோடு, பலரிடமிருந்து பலவகையில் உதவி பெற உடன் நின்றார். இவ்வாறு நான் செயலாளனாகவும் டாக்டர் சுந்தரவதனம் தலைவராகவும் அமைய 'திரு. வி. க. உயர் நிலைப்பள்ளிக் குழு உருவாகிப் பள்ளியும் தொடங்கப் பெற்றது: (அதில் முதல் மாணவனாக என் மகன் மெய்கண்டான் சேர்க்கப் பெற்றான்) இன்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் அந்த இடத்திற்கே உயர்ந்த கட்டிடமாக வும் உயர் இடமாகவும் அமைந்து செயலாற்றி வருவதை யாவரும் அறிவர். அப்பள்ளி அமைத்த இடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடிசைகள் இருந்தன. எனவே அவற்றை அகற்றுவது கடினம் எனக் கருதியும் அன்று (1955) அப். பகுதியே ஊரின் கடைசியாக அமைந்ததாலும், அன்று. நகராண் கழகத் தலைமைப் பொறியாளரும் செனாய் நகர் வாசியுமாகிய திரு. மீரான் அவர்களிடம் மாற்று இடம் தருமாறு வேண்டினேன். அவர் பலதிட்டங்களை அறிந்த வராதலாலே இது கடைசி இடமன்று, இன்னும் சில ஆண்டு களில் இதன் மேற்கிலும் வடக்கிலும் பலகல் தூரம் நகர் விரிவடையும். எனவே இந்த இடம் நல்லது எனக் கூறினார்.