பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அத்துடன் அந்தக் குடிசை வாழ் மக்களுக்கு மாற்றிடமும் தந்து உதவினார். நாங்கள் அக்குடிசைகளைப் பிரித்து அமைக்கப் பொருளுதவி செய்ய, அவர்கள் வேற்றிடம் சென்றார்கள்: பள்ளியும் உருவாயிற்று. இந்தப் பணிக்கென நான் அடிக்கடி - ஏன் நாள்தோறும் ஆறு மாதங்களுக்கு மேலாக நகராண் கழகம் செல்வேன். அப்போது என்னிடம் சிறு கார் இருந்தது என எண்ணு கிறேன். எனவே அதை நாடோறும் அங்கே காணும் நண்பர்கள் நீங்கள் பச்சையப்பர் கல்லுரியினை விட்டு, கார்ப்பரேஷனுக்கு வேலைக்கு வந்து விட்டீர்களா எனக் கேட்பர். - அப்படியே இந்த வள்ளியம்மாள் கல்வி அற மனைகளுக் காக அடிக்கடி வீட்டுவசதி வாரியத் தலைமை நிலையத்துக் குச் சென்றபோது (நந்தனம்) பல அன்பர்கள் கேட்டதும் நினைவுக்கு வருகிறது. - 1955க்குப் பிறகு என் வாழ்க்கையில் எதிர்பாராத சில மாறுதல் நடைபெற்றன. 1958 தொடக்கத்தில் வாழ்க்கைத் துணையை இழந்தேன். மாற்றத்துக்காக ஒராண்டு மதுரைத் தியாகராஜர் கல்லூரியில் பணியாற்றினேன். மதுரை வாழ்க்கையைப் பற்றி என் "வையைத் தமிழில் ஓரளவு குறித்துள்ளேன். மறு படியும் பச்சையப்பரில் பணி தொடர்ந்து நடைபெற்றது. இடையில் 1957ல் திரு. பக்தவத்சலம் அவர்கள் நடத்திய பாரதி தேவி இதழ் நடத்துவதை நேரில் மேற்பார்வை செய்யச் சொன்னார்கள். கல்லூரிப் பணிகளுக்கிடையில் அவர் சொற்படி அந்தப் பணியினையும் ஓராண்டு செய்து முடித்தேன். அவர்களும் மறுபடி அமைச்சரவையில் இடம் பெற்றனர்; நானும் அந்தப் பணியினை விட்டுவிட்டேன். இவைகளுக்கு இடையில் பொங்கல்தொறும் எங்கள் ஊர் அங்கம் பக்கத்துக்குச் சென்று முறைப்படி பொங்கல் விழாவினைக் கொண்டாடி வழிபாடாற்றுவது வழக்கம். 1958ல் மனைவி மறைந்தபின் அந்த வழக்கத்தினையும்