பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 கைவிட்டேன். எனினும் ஊருக்குச் செல்லும்தோறும் என்னை அன்புடன் வளர்த்து மனிதனாக்கிய அன்னைக்கு ஏதேனும் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்று என் மனது தூண்டிக் கொண்டே இருக்கும். ஆயினும் என் சூழலும் வாழ்வின் அமைப்பும் வருவாயும் அத்தகைய ஆக்கப் பணிக்கு வழி வகுக்கா நிலையில் என்னை எங்கோ ஈர்த்துச் சென்று கொண்டிருந்தன. அக் கால நிகழ்ச்சிகளையெல் லாம் இங்கே எழுதத் தேவை இல்லை என அமைகின்றேன். (என் சென்னை வாழ்க்கையைப் பற்றிய ஒரு வாழ்க்கை நூல் தனியாகவே வர இருக்கின்றது. இளமை வாழ்க்கை யினை இளமையின் நினைவுகள், என்ற நூலிலும், காஞ்சி யில் வாழ்ந்ததை 'காஞ்சி வாழ்க்கை" என்ற நூலிலும் தொட்டுக் காட்டியுள்ளேன்.) ஆயினும் 1967-68 ஒரு புதிய சூழல் உருவாயிற்று. d திரு. பக்தவத்சலம் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, என்னைக் கேளாமலேயே எ ன் ைன ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவனாக இருக்கப் பரிந்துரை செய்தனர். அந்த இடம் தமிழக அரசு கொடுக்கும் மானியத்தாலேயே அமைக்கப் பெற்றது. எனவே இவர்கள் வழியாகவே அதற்குரியவரைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தமையின், அவர்கள் என் பெயரை அதற்குப் பரிந்துரைத்தனர். அந்த முறை வகை களையெல்லாம் எங்கள் பள்ளி விழாவில் தலைமை வகித்த முன்னாள் தலைமைச் செயலர் - அக்காலத்திய (1967) கல்விச் செயலர் திரு. கார்த்திகேயன் அவர்கள் I.A.S. விழா வில் விளக்கிச் சொல்லியபோது நான் அறிந்தேன். எனக்கு அங்கிருந்து உத்தரவு வந்த பிறகுதான் யாவும் தெரியும், அரசாங்கப் பரிந்துரையின் பேரில் நியமனம் என்றிருந்ததால் உடனே முதல் அமைச்சர் அவர்களைக் கண்டேன். அவர்கள் "நான் முதலிலேயே சொன்னால் போகமாட்டாய் என்று தெரியும்; அதனாலேயே சொல்லாமல் அனுப்பிவிட்டேன்' என்றார். மறுமொழி சொல்லாது உடன் ஐதராபாத் சென்றேன். அரசாங்க ஆணையாதலால் பச்சையப்பர்