பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அறநிலையத்தினரும் உடன் எனக்கு ஓராண்டு விடுப்பும் தந்து அனுப்பினர். என் ஒய்வு ஊதியம் முதலியவற்றினும் குறைபாடு இன்றி அமைந்தது. 1967-ல் நான் அங்கிருந்து திரும்பி வந்தபோது தமிழக நிலை முற்றும் மாறுபட்டிருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராயிருந்தனர். அவர் என்னை அழைத்து "உங்களுக்கு இங்கே நிறைய வேலை இருக்கிறது! உடன் வந்துவிடுங்கள்' என்றார். எனவே மறுபடியும் பழையபடியே பச்சையப்பரில் பணியாற்றி அமைதியாகக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தேன். அண்ணா பச்சையப்பரில் பயின்றவர். அ வ ர் முதலமைச்சரானபோது கல்லூரியில் பாராட்டுவிழா நடத்தி னர். அதில் அவர் பலவற்றைப் பற்றிப் பேசிய்தோடு, ஒன்றைச் சுட்டிக் காட்டினார். (அப்போது நான் ஐதரா பாத்தில் இருந்தேன்) அவர் சொன்னது இதுதான். 'பச்சையப்பர் கல்லூரியின் வரலாற்றில் ஆங்கிலேயருக் குப் பின் பலர் கல்லூரி முதல்வர்களாக வந்துள்ளனர். அவர்கள் பலபலதுறையினைச் சார்ந்தவர்கள். எனினும் இதுவரைத் தமிழாசிரியர் ஒருவரை அறநிலையம் தலைவராக நியமிக்கவில்லை. அடுத்தாயினும் அக் குறையைத் தீர்ப்பார் களாக" என்றார். நான் ஐதராபாத்திலிருந்து வந்ததும் அண்ணா என்னைக் கருத்தில் வைத்தே அப்படிச் சொன்னார் என்று பலர் கூறினர். - பிறகு அண்ணாவின் கட்சியினைச் சேர்ந்தவர்கள் பச்சையப்பர் அறநிலையத்தைக் கைப்பற்றிய பி ற கு , அண்ணாவின் சொல்லின்படி என்னை முதல்வராக்க முயன்றனர். ஆயினும் உள்ள முதல்வரும் துணை முதல் வரும் என்னினும் இளையவராதலின் அம்முயற்சி கூட வில்லை. ஆனால் புதியதாக ஒரு துணை முதல் பதவியினை அமைத்து எனக்கு அந்தப் பதவியைக் கொடுத்து,