பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 தொடர்ந்து அறுபத்தொரு வயது வரை இருக்குமாறும் ஆணையிட்டு அறநிலையத்தார் அண்ணாவின் விழைவினை ஒரளவு நிறைவேற்றி நின்றனர். அதற்கு முன்பும், 1967ல் என நினைக்கிறேன் - ஒருமுறை துணை முதல்வர்.முதல்வர் பதவிக்கு என் பெயர் தேர்ந்தெடுத்த காலத்தில் நான் அப்பொறுப்பை வேண்டாமென்று கூறி விலகி நின்றேன். எனினும் இது மறைந்த அண்ணாவின் விழைவின்படி அமைந்ததாலும் பணியின் இறுதிக் கட்டமாதலாலும் அதை ஏற்றுக் கொண்டேன். நான் ஒய்வு பெற்றதும் எனக்கெனத் தோற்றுவிக்கப் பெற்ற அந்த புதிய பதவியும் இல்லை யாயிற்று. என்றும் அன்னையைப் பற்றிய எண்ணம் என்னை உந்திக் கொண்டே இருந்தது. அதற்கேற்றாற்போன்று 67, 68 இரண்டு ஆண்டுகளிலும் சென்னைப் பல்கலைக்கழக வரலாறு காணா வகையில் என் வையைத் தமிழ்' என்ற நூல் பல்கலைக்கழக வகுப்புகளுக்குப் பாட நூலாக அமைந்தது. அதனால் பெருந்தொகை பெற்றேன். அந்த ஆண்டில் இறுதியிலே என் உயிர் ஒப்பந்தத்திலிருந்தும் இருபத்தையாயிரத்துக்குமேல் வருமென அறிந்தேன். அப்படியே 1969ல் எனக்கு 55வயது ஆகின்றமையின் அப்போது என் தெய்வீக நிதியினை (Provident Fund) முடித்துப் பெருந்தொகை பெறலாம் என்றனர். எனவே எல்லாவற்றையும் சேர்த்தால் ஒரு இலட்சத்துக்குமேல் பெறலாம் என்ற துணியிலே அன்னையின் பணியினை 1968ல் தொடங்கத் திட்டமிட்டேன். அதற்கேற்றாற்போல அண்ணா நகரில் எடுத்துக் கொண்ட என் மனைக்கு ஈடாக ஒர் இடம் (இரண்டுமனை) எனக்கு ஒதுக்கித் தந்தார்கள். அந்த இடத்தினைப் பயன்படுத்தியும் வரப் போகும் பெருந் தொகையினைக் கொண்டும், அங்கே அன்னையின் பெயரால் பள்ளியினைத் தொடங்கலாம் என்று 1968ல் முடிவு செய்தேன். அந்த முடிவே இன்று இந்த எல்லையில் வளர்ந்துசிறக்க நிற்கின்றது. தி.தி.-4