பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஊரிலே இருந்த நிலங்கள், காஞ்சியில் இருந்த மனை முதலியவைகளை விற்றும் இடையில் வந்த உயிர் ஒப்பந்த நிதி முதலியன கொண்டும் என் பெண்க்ள் இருவருக்கும் பிள்ளைக்கும் தனித்தனியாக வீடுகள் கட்டி அவரவர்கள் பெயருக்கே 1961 க்கு முன்பே கொடுத்து விட்டேன். பெண் கள் இருவருக்கும் மணம் முடிந்தது. அவரவர் வீடுகளின் வருவாயினை அவரவர்கள் பெறுகிறார்கள். மகனுக்கும் அப்படியே. அமைந்தகரை வீட்டின் வருவாயினை வாங்கிய கடன்களைத் திருப்புவதற்கும் பிற செலவுகளுக்கும் பயன் படுத்தினேன். ஊரில் பரம்பரை நன்செய் புன்செய் நிலங்கள் நூறு ஏக்கர் அளவில் இருந்தவற்றையும், மனைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு முதலியவற்றையும் விற்று அந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்து முடித்தேன். (தற்போது ஒரு மனையும் சுமார் 6 ஏக்கர் நிலமும் எனக்கு ஊரில் உள்ளன) எனவே மற்றைய வருமானங்களை என்னை வளர்த்து ஆளாக்கிய அன்னையின் பணிக்குச் செலவிடுதல் என முடிவு செய்தேன். பிள்ளைகளுக்கு உரியவற்றைச் செய்து விட்டமையானும் அவர்கள் ய ா ர் சொல்லையும் கேளாவகையிலே நம் உணர்வோடு இருந்தமையானும் அனைத்தும் என் தந்தை வழிவந்த செல்வம் இன்மையானும் அன்னை வழியே வந்தமையாலும் என் பணியில் யாரும் குறுக்கிடவில்லை; ஒத்துழைத்தார்கள் என்றே சொல்ல ᏮafᎢ LᎠ , ஐந்து பிள்ளைகளோடும் மூன்று ஆசிரியர்களோடும் அன்று தொடங்கிய பள்ளி என் வீட்டின் (அன்று 4 ஐயாவு தெரு . இன்று 29) அடித்தளத்தில் தொடங்கப்பெற்றது. அப்போது வீட்டின் பின்புறத்தில் குடிஇருந்தவர் விரைவில் காலி செய்வதாக இல்லை; அதற்கென வழக்குமன்றம் செல்ல வேண்டியும் வந்தது; கடைசியில் காலி செய்தார். முதலாண்டில் அதிக மாணவர் இல்லையாதலின் அதிகத் தொல்லை இல்லை. அடுத்த ஆண்டிலே சற்றே மாணவர் தொகை கூடிற்று. அந்த ஆண்டிலேதான் முழுவிடும் பள்ளிக்