பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5i கெனப் பயன்படுத்தப்பெற்றது. அங்கே மூன்றாம் வகுப்பு வரையில்தான் நடத்த முடிவு செய்தோம். இன்றும் அங்கே மூன்றாம் வகுப்பு வரையில்தான் உள்ளது. - அதே வேளையில் அண்ணா நகரில் எனக்கென ஒதுக்கிய 178வது எண்ணுள்ள மனையில் கட்டடம் கட்ட நினைத்தேன். 1969ல் என் தெய்வீக நிதித் தொகையும் உயிர் ஒப்பந்த நிதித் தொகையும் நூல்விற்ற தொகையும் ஒரு சேர வந்தமையின் உடன் கட்டடம் கட்டல் எளிதாக அமைந்தது. என் வீட்டினைக் கட்டிக் கொடுத்த அதே முருகேச நாயக்கர் மேற்பார்வையிலேயே ஒர் ஒப்பந்தக்காரர் வழியே அடித்தளத்தினைக் கட்டி முடித்தேன். இதுவரையில் சென்னைத் தளம்', என்ற அமைப்பில் மரம் இட்டுக்கட்டிப் பழக்கமான எனக்கு இந்த கான்கீரிட் கட்டடம் சிறிது புதிதாகத்தான் இருத்தது. ஒப்பந்தக்காரர்தம் உடன் உதவி யாலும் மற்றவர் துணையாலும் கட்டடம் ஒரளவு செம்மை யாகக் கட்டி முடிக்கப் பெற்றது. அதற்குத் தேவையான மரங்களையெல்லாம் சேலம் ஏர்க்காட்டிலிருந்து மிகக் குறைந்த விலைக்குக் கொண்டு வந்தேன். எப்படியோ ஒரளவு மனநிறைவோடு அடித்தளத்தினை 1969ம் ஆண்டு கட்டி முடித்து நல்லநாளில் (விசயதச்மி) வகுப்பினையும் தொடங்கி விட்டோம். அத்தொடக்க விழாவில் நாவலர் நெடுஞ்செழியன், திரு. பக்தவத்சலம், திரு. நெ. து. சுந்தரவடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதை அன்று நாட்டிய அடிக்கல் இரண்டும் சான்று கூறிக்கொண்டே இருக்கின்றன. அண்ணாநகர் புதிதாக வளர்ந்து வரும் பகுதி யாதாலாலும் அன்று முறைப்படி நடத்தப் பெறுகின்ற பள்ளி இல்லையாதலாலும் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இதனைப் பெரிதும் வரவேற்றனர். இங்கே முதலில் 1970ல் தான் ஐந்தாம்வகுப்பு வரையில் தொடங்கினோம். 178.