பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 எண்ணுள்ள , மனையில் அடித்தளத்தில் மட்டும் ஆறு அறைகள், அலுவலக அறை, முதல்வர் அறை என்ற அளவில் கட்டிடம் அமைய-பக்கத்திலேயே சிறு குடி ஒன்று வேய்ந்து கொண்டோம். எங்கள் கட்டடத்துக்குப் பக்கத்தில் உள்ள சுமார் 16மனை, வணிகமுறைக் கட்டிடத்துக்கென ஒதுக்கப் பெற்று, வீட்டுவசதி வாரியத்திடமே இருந்ததால், அந்தக் காலி இடத்தினை விளையாட்டிடமாகப் பயன்படுத்திக் கொண்டோம். ஆனால் இன்று, அந்த இடமும் எங்களுக்கு உரிமையாகி, அதில் பல லட்சங்களில் மாடிகள் அமைந்து ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயிலும் இடமாகும் என நான் நினைக்கவே இல்லை. முதல் கட்டிய கட்டிடத்திலே ஏதோ சிறிய அளவு என் அன்னையின் நினை வாக ஐந்தாவது வகுப்பு வரையில் பள்ளியை அமைத்தால் போதும் என்றுதான் நினைத்தேன். அதனாலேயே இந்தப் பள்ளியை எந்தக் கல்வித்துறையுடன் இணைப்பது என்ற எண்ணமே எனக்கு எழவில்லை. மேலும் அக்காலத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டையுமே பயிற்சி மொழியாக்க நினைத்துச் செயல்பட்டேன். "தமிழ் தமிழ்' என்று விண்முட்டப் பேசும் இந்த நாளில் தமிழில் பயிலும் மாணவர்களுக்கு வருங்காலம் இருட்டாக உள்ளது என்பதை நாடு அறியும். தமிழ் நாட்டில் தமிழ் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முதலிடம் தருவதில்லை; வெளிமாநிலங்களுக்கோ அவர்களால் செல்ல முடியாது. இதனாலேயே அரசாங்கப் பள்ளிகளிலும் அரசாங்க மானியம் பெறும் பள்ளிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக இருப்பினும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்பு களுக்கே அதிகமாக மாணவர் சேர விரும்புகின்றனர். தமிழ் பற்றி மேடையில் முழங்கும் தலைவர்களும் பிறரும் கூடத் தத்தம் பிள்ளைகளை ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளில் சேர்த்துப் பயில வழி காணுகின்றனர். பெருஞ் செல்வர்களோ, பெருந்தொகை கொடுத்து, ஆங்கிலப் பயிற்று மொழிப்பள்ளிகளில் இடம் வாங்குகின்றனர்.