பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53。 எனவே, ஏழை மக்களும் அதிகார மற்றவர்களுமே வேறு வழி இன்றி, தமிழ் பயிற்று மொழி வகுப்புகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்புகின்றனர். தமிழ் தமிழ்நாட்டில் வளர்வதைக் காட்டிலும் அமெரிக்கா, இங்கிலாந்து, மலேயா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் சிறக்க வளர்ந்து வரும் தன்மையினையும் பிறவற்றையும் என் 'ஏழு நாடு களில் எழுபது நாட்கள்' என்ற நூலில் பலவிடங்களில் சுட்டிக் காட்டியுள்ளேன். எங்கள் பள்ளியில் தொடக்கத்தில் தமிழ்-ஆங்கிலம்இரு மொழிகளையும் பயிற்று மொழி என்று அறிவித்தோம். விண்ணப்பங்கள் வந்தன. ஆயினும் ஐந்து வகுப்புகளுக்கும் தமிழிற்கு மூன்று விண்ணப்பங்கள்தாம் வந்தன. மற்றவை ஆங்கிலப் பயிற்று மொழிக்கே. எனவே அந்த ஆண்டு ஆங்கிலத்தை மட்டுமே பயிற்று மொழியாக்கினோம். அடுத்த ஆண்டு முயன்றபோதும் இதே நிலைதான். எனவே ஆங்கிலத்திலேயே பயிற்றுமொழி என்ற அமைப்பில் எங்கள் பள்ளி அமையலாயிற்று. எனினும் தமிழ் இங்கே பயிலும் மும்மொழிகளுள் ஒன்றாகக் கட்டாயமாக அமைந்துள்ளது. எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர் யாவராயினும் (தமிழரல்லாதார் ஏறக்குறைய பாதி அளவில் உள்ளனர், இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாகக் கட்டாயம் தமிழ் பயின்றாக வேண்டும் என்ற நியதி உள்ளது. எனினும் மத்திய கல்வி குழுவின் ஆணையின் கீழ் உள்ள பள்ளிகள் சிலவற்றுள்ளும்-மத்திய அரசாங்கமே நடத்தும் பள்ளிகளி லும்-சென்னையிலே மாணவர் தமிழைப் படிக்க விரும்பினா லும் அதற்கு வாய்ப்பு இல்லாமல் தமிழ் பயிலும் நிலை யில்லை. மும்மொழித் திட்டம் இருப்பினும், தமிழல்லாத வேறு மூன்று மொழிகளையே தமிழ்க் குழந்தைகள் பயில வேண்டியுள்ளது. (இதுபற்றித் தமிழக அரசாங்கத்துக்கும் மத்திய கல்விக்குழுவிற்கும் நான் முன்னரே பல கடிதங்கள் எழுதியும் பயனில்லை). எனவே எங்கள் பள்ளியில் மாநில மொழியும் இந்தியுமொழியும் உலகமொழியும் கட்டாயம்