பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பயிற்றப்படுவதோடு, பாடங்கள் அனைத்தும் உலக மொழி யாகிய ஆங்கிலத்திலேயே கற்றுத் தரப் பெறுகின்றன. இந்த நியதியில் சில உண்மைகளை நான் கண்டு கொண்டேன்' தமிழரல்லாத பெண்கள் தமிழில் விஞ்சிநின்று தமிழில் சிறக்கப் பேசியும் எழுதியும் தமிழில் முதலிடம் பெற்றுப் பரிசு கள் பெறுகின்றனர். அப்படியே தமிழ்ப் பெண்கள் இந்தியில் சிறக்கப் பயின்று முதலிடமும் பரிசும் பெறுகின்றனர். எனவே குழந்தைகள் பயில்வதில் சளைப்புக் காட்டுவதில்லை என உணர்ந்தேன். இங்கே தமிழகத்தில் இருமொழித்திட்டம் இருப்பினும் தமிழ் கட்டாயம் இல்லை. கட்டாயம் ஆக்க நினைத்தாலும் முடிவதில்லை. தமிழ் நாட்டில் பாடதிட்டப்படி தமிழ் பிற இந்திய மொழிகளுடன் பிரஞ்சு, ஜெர்மன் போன்ற அந்நிய நாட்டு மொழிகளுள் ஒன்றாகவே உள்ளது. எனவே ஆங்கிலத்தோடு, பிரஞ்சோ, சர்மனோ, இந்தியோஎதுவோ எடுத்துப் பயிலலாம். தமிழ் நாட்டில் தமிழைத் தொடாமலேயே உயர்கல்வி வரையில் செல்லலாம். நான் தற்போது ஆரம்பித்த தமிழக அரசு ஆணைக்குட்பட்ட & dia? §anajug. 6d) (Matriculation School) gislanpä கட்டாயமாக்க முடியவில்லை. ஆங்கிலத்துடன் பிரஞ்சு, சர்மன், இந்தி என்று படிப் பவரைத் தடுக்க முடியாது. ஆனால் மத்திய கல்வி முறை வழி அவற்றோடு தமிழையும் கட்டாயமாக்கி இங்கே பயிலும் அனைவரும் தமிழைப் படித்தாக வேண்டும் என்ற முறையில் பள்ளியை நடத்தி வருகிறோம், பிற மாநிலங்களில் அவ்வந் நிலத்து மொழி ஒரளவு கட்டாயமாக்கப் பெற்றுள்ளமை போன்று இங்கே தமிழைக் கட்டாயமாக்கலாம். மனம் வேண்டும். திரு. அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தபோது எங்களுடைய வேண்டுகோளையேற்று தமிழைப் பொது, சிறப்பாக்கி, பொதுவை அனைவரும் பயில வும் சிறப்பிற்கு பதில் தாய் மொழி அல்லது வேற்றுமொழி பயிலவும் வழி செய்தனர். அதற்குரிய பாடநூல்களை