பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 எழுதச் சிலர் தயங்கியபோது, அமைச்சர் ஆணையின்படி நானே எழுதித் தந்தேன். (மாக்மில்லன் கம்பெனியார் வெளியிட்டனர்.) அத்தகைய பாடநூல்களை பின் பலர் வெளியிட்டனர். சில ஆண்டுகள் அம்முறை நன்கு சிறந்தது. ஆனால் அதே காங்கிரஸ் அமைச்சரவையில் வேறொருவர் கல்வி அமைச்சராக வந்தபோது அந்த முறையை நீக்கினர். அன்று முதல் இன்று வரையில் தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் இல்லை என்ற நிலையே நிலவி வருகிறது. இந்த நிலைக்கு மாறாக மத்திய கல்வி முறைவழி நாங்கள் இங்கே தமிழைக் கட்டாயமாக்கி நடத்தி வருகிறோம். மறுபடியும் எங்கோ சென்றுவிட்டேன். மன்னியுங்கள். இவ்வாறு பல்வேறு வகையில் பள்ளிகளை ஆங்காங்கே வளர்த்து, கல்விப் பணியினை மேற்கொண்ட நான்-என் அன்னையின் பெயரால் இந்த அறத்தினையும் கல்விக் கூடத்தினையும் நிறுவி வளர்த்து வருகிறேன். எங்கோ கிராமத்தில் என்னைப் பெற்றெடுத்த அன்னையின் பெயரால் நான் இதை நடத்துவதற்குக் காரணம் அவளே என் பிறவிக்குக் காரணம் என்பது மட்டுமன்றி, என்னை பெற்று, வளர்த்துப் பேரிட்டு உலகில் மனிதனாக உலவச் செய்தவளே அவள் என்பதுமாகும். என் தந்தை இளமையிலேயே மறைந்தது மட்டுமன்றி, இருந்தபோதும் அவர் என் வளர்ச்சியில் அக்கறை காட்டாது இருந்தார். ஆனால் அதே வேளையில் தன் ஒரே மகன் வளர்ச்சியடைய வேண்டும் என்றும், அதே சமயத்தில் தன்னை விட்டு விலகி வேறு எங்காவது அரசாங்க அலுவலிலோ வேறு வகையிலோ செல்லாதிருக்கவேண்டும் என்றும் விரும்பினார்கள். அதன் படியே பள்ளியிறுதி வகுப்பினை முடித்து மேலே படிக்கச் செல்லாமல் அவர்கள் தனியாக இருந்தபோது நானும் உடன் கிராமத்தில் இருந்தேன். பின் தனியாகப் பயின்று புலவர் பட்டம் பெற்ற பிறகும், அவர்கள் விருப்பின்படியே அருகில் இருக்கும் காஞ்சியிலேயே பணியாற்றினேன். அக் காலத்தில்தான் (1941) அன்னையாரும் பெரிய அன்னை