பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 யாரும் மறைந்தார்கள். அவர்கள் மறைந்த பிறகே நான் மேலே பட்டப்படிப்பு முதலியவற்றைத் தனியாகப் பயின்று தேர்ச்சி பெற்றேன். பிறகு சென்னைவந்து பச்சையப்பரில் பணி ஏற்று, வாலாஜாபாத் மேனிலைப்பள்ளியினையும் பின் திரு.வி.க. பள்ளிப் பணியினையும் இந்த வள்ளியம்மாள் அறப்பணியினையும் தொடங்க முடிந்தது. ஒரு வேளை அவர்கள் இன்றும் நெடுங்காலம் வாழ்ந்திருந்திருப்பார்களா யின், நான் மேலே படித்திரு க மாட்டேன்; சென்னைக்கும் வந்திருக்க மாட்டேன். என் வாழ்வு எப்படி இருந்திருக்கும் என எண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை. சென்னை வந்ததாலே ஊரிலே இருந்த நிலங்களுள் பெரும் பகுதியை விற்று, பிள்ளைகளுக்கு இங்கே தனித்தனி வீடுகள் கட்டி, அவர்கள் வாழ்க்கைக்கு வருவாயினைத் தேடித்தர முடிந்தது. இல்லையானால் அரசாங்கத்தின் புதிய சட்டங்களின்படி என் நிலங்கள் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப் பெற்றிருக்கும். இப்போது நான் கொண்டுள்ள ஆறு ஏக்கர் அளவுதான் அப்போதும் நிலைத்திருக்கும். அதிலும் இன்றைய சூழ்நிலையில் ஊரில் ஒழுங்காகப் பபிரிடமுடியாது நான் திண்டாட வேண்டி வந்திருக்கும். (ஊரில் உள்ள வற்றை ம் முற்றும் விற்றுவிட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன) கர்ஞ்சியிலோ, இன்றேல் வாலாஜாபாத்திலோ ஒரு வீடு வாங்கிக் கொண்டு அமைதியாக என் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்திருப்பேன். இத்தனைப் பெரியவர்களின் நல்ல கூட்டுறவும், கல்லூரி, பல்கலைக்கழங்களில் பல துறைகளில் பணியாற்றவும், இதுபோன்ற கல்வி அறங்களை நிறுவி ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்குக் கல்விப் பணி ஆற்றவும் இயலாது கழிந்திருக்கும். எனவே என் அன்னையார் வாழ்ந்தபோது என் வளர்ச்சியினைக் கண்ணும் கருத்து மாகப் போற்றியமை போன்றே அவர்கள் மறைந்த பிறகும் என் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள் என எண்ணுகிறேன். ஆம்! இப்போதும்கூட எனக்குச் சில சமயங்கள் இடர் வந்துற்ற போதிலெல்லாம் அவர்கள் கனவின் மூலமும் தோன்றாத் துணையாகவும் இருந்து உதவி