பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷7 வருவதை நான் ஒருவனே அறியமுடியும். ஒரு சிலர் இதைச் சொன்னால் எள்ளி நகையாடலும் செய்வர். ஆயினும் இறைவனும் அன்னையும் என் இரு பக்கலிலும் இருந்து "இடரினும் தளரினும் அஞ்சேல் என்று ஆதரிக்கிறார்கள் ன்ன்பதை நான் நன்கு அறிவேன். அவர்கள் அருளாலேயே, எத்தனையோ கொடுமையாளர்கள் இழைக்கும் இன்னல் களைத் தகர்க்கும் முகத்தான், சில நல்லன்பர்கள் என் முயற்சிக்கு முற்றும் ஆதரவாக இருந்து என் வாழ்க்கை அன்று வளர்ந்ததற்கும் இன்று இந்த அறம் உயர்வதற்கும் உதவி னார்கள் . உதவுகிறார்கள் என்பது முற்றும் உண்மையாகும். ஒரு சிலர் என்னென்ன வகையில் தீங்கிழைக்கலாம் எனத் திட்டம் தீட்டிக் கொடுமை செய்யும் வேளைகளிலெல்லாம், சில நல்லவர்கள் இடையில் வந்து, அந்தக் கொடுமைகளை யெல்லாம் துடைத்து என் அறப்பணி ஒல்லும் வகையான் வளர உதவுகிறார்கள். அதுமட்டுமன்றி என்னைச் சூழ்ந்து, எனக்குக் கொடுமை இழைந்தவர்களெல்லாம் அவரவர் இருந்த பதவி நிலைமாறி, திசை கெட்டுப் போவதையும் காண்கின்றேன். எனினும் அவர்கள் நிலையைப் பற்றி நான் எண்ணி இரக்கப்படுவதோடு, இறைவனிடம் எனக்காக அவர்களை நலிவுறுத்த வேண்டாம்' என்ற வேண்டு கோளைத் தான் என்னால் விடுக்கமுடிகிறது. இவ்வாறு இருந்த போதும் மறைந்த பிறகும், என் அன்னை உடனிருந்து உற்றுழி எல்லாம் உதவுகின்ற காரணத்தினா லேயே ஒரளவு நான் எடுத்த பணி முட்டின்றி நலம் பெறுகிறது. பள்ளி வரையறுத்த சட்டதிட்டங்களின்படியே நடை பெறுகின்றது. 1974ல்தான் எங்களுக்கு மத்திய கல்விக் குழுவின் ஒப்புதல் கிடைத்தது. முன்னமேயே எங்கள் கல்விக் குழுவினை 1971ம் ஆண்டு. அந்த ஆண்டின் 225வது எண்ணுள்ள குழுவாக 1860ம் ஆண்டின் சட்டப்படி பதிவு செய்து கொண்டோம். அதில் எழுவர் உறுப்பினராக உள்ளனர். இரண்டொருவர் தவிர்த்து மற்றவர்கள்