பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5& இன்றளவும் இதில் உறுப்பினர்களாக இருந்து செயலாற்றி ஒத்து உயர்வுக்கு வழி கோலி உதவுகின்றனர். எனவே இது சட்டப்படி இயங்கும் பள்ளியாகும். மேலும் தொடக்கத்தில் என் வருவாயின் பெரும் பகுதியினை இதன் வளர்ச்சிக்குச் செலவிட்டதோடு, பின் இதில் வளர்ச்சிக் கட்டணம் முதலிய வற்றின் வழியே வரும் வருவாயினையும் பிற வாடகை முதலியவற்றையும் மேலும் மேலும் இதன் வளர்ச்சிக் கெனவே செலவிடுகிறோம். அதனாலேயே தற்போது ஐம்பது லட்சத்துக்கு மேலான கட்டிடங்களும் அண்ணா நகரில் நூறு மனை நிலங்களும் பெற்றுத் திறம்படச் செயலாற்றமுடிகின்றது. இன்று இவற்றின் மதிப்பு பல மடங்கு அதிகமாகி உள்ள தன்மையினையும் யாவரும் அறிவர். ஆயினும் அவற்றைப் பெறுவதற்கும் கட்டடங் களைக் கட்டுவதற்கும் நாங்கள் பட்ட கஷ்டங்களை ஒரு சிலரே அறிந்திருக்கமுடியும். எப்படியோ ஒருவகையில் முயன்று பதினெட்டு ஆண்டுகள் கழிந்த பிறகே நான் திரும்பிப் பார்க்க நினைத்தேன்; திரும்பி பார்க்கும் போது திகைக்காமல் என்ன செய்ய முடியும்? 1974,75 ல் வீட்டு வசதி வாரியத்தார் பக்கத்தில் உள்ள பதினான்கு மனைகளை விரும்பிக் கொடுத்து உதவினர். அப்படியே 1977ல் 77மனை கொண்ட . தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ள இடத்தினையும் தந்தனர். ஆயினும் அந்த இடத்தினை நான்கு ஆண்டுகள் கழித்தே - 1981ல் உரிமையாக்கிக் கொள்ளமுடிந்தது. அதற்கிடையில் அன்றைய வீட்டு வசதி வாரியத் தலைவரும் பிறரும் இழைத்த செயல்களையும் பிற நிலைகளையும் உதவிய நல்லவர்தம் பண்புகளையும் இந்நூலிலே தனியாக எழுதி யுள்ளேன். அப்படியே மெட்ரிகுலேஷன் பள்ளியினைப் பற்றியும் தொழிற்கல்வி போன்ற பிறவற்றைப் பற்றியும் தனியாகச் சுட்டியுள்ளேன். ஆம். பெற்றாள்! வளர்த்தாள்! பெயரிட்டாள் என் அன்னை வள்ளியம்மாள். அவளின்றி நான் இல்லை.