பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 எனவே அவள் பெயரை என்றும் நிலவும்வண்ணம் ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் என்றோ முகிழ்ந்தது. இன்று நல்லவர் உடன் துணையால் உருப்பெற்றது. அதிலும் இளமை முதல் என்னோடு பழகி நின்ற பெரியவர் பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அமைந்த நகரில் இப்பணி இருப்பதை எண்ணி நான் மிகவும் அகமகிழ்கின்றேன். பெற்று வளர்த்துப் பெயரிட்ட அந்த அன்னையின் பெயரால் அமைந்த இப்பள்ளி ஆண்டுதோறும் வளர்ந்த வளர்ச்சியினைப் பற்றி இனி ஒரளவு காணலாம் என எண்ணுகிறேன். பிறகு முறையே இதில் பயின்ற மாணவர், பெற்றோர், ஆசிரியர், மற்றோர், வீட்டுவசதி வாரியம், அரசாங்கம் போன்ற மற்றவர்தம் பல்வேறு பணி களையும் பிறவற்றையும் விளக்க நினைக்கின்றேன். அவை பற்றியெல்லாம் நினைக்கும்போது உண்மையில் திகைப்பே உண்டாகின்றது. ஒருபுறம் இவ்வளவு நல்லவர்களா! என்ற வியப்பும், ஒருபுறம் இவ்வளவு பொறாமைக்காரர்களா? என்ற அச்சமும், மற்றொருபுறம் இப்படியும் சில மனிதர் களா? இப்படியும் வாழ எண்ணுகிறார்களா? என்ன அதிசயமும் பிறிதொருபுறம் இதுவும் உலகமா? என்ற கேள்வியும் எழுகின்றன. இத்தகைய எண்ணச் சூழல் களுக்கிடையே நான் அடுத்த பகுதிக்குள் நுழைகின்றேன்.