பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தோற்றமும் வளர்ச்சியும் பெற்று வளர்த்துப் பெயரிட்டுப் பெரியவனாக்கி உலகில் மனிதனாக உலவச் செய்த அன்னை வள்ளியம் மாளுக்கு என நிலைத்த ஒரு பணியினைச் செய்ய என் உள்ளம் நெடு நாள் நீடு நினைந்தது எனக் கூறினேன் அல்லவா! என் அன்னையாரும் பெரிய தாயார் மீனாட்சி அம்மாளும் ஒருவர்பின் ஒருவராக 1941-ல் மறைய, அந்த எண்ணம் திண்ணிதின் வலுப்பெற்றது. அப்பொழுது நான் காஞ்சியில் ஆந்திரசன் பள்ளியில் தமிழாசிரியனாகப் பணி புரிந்துவந்தேன். அவர்கள் நினைவாக ஏதேனும் நிலைத்த பணி செய்ய எண்ணியபோது எங்கள் ஊர் அங்கம் பாக்கம் மறுகரையில்-பாலாற்றின் வடகரையில், எங்கள் வீட்டுக்கு நேர் வடக்கே புளியம்பாக்கம் கிராமத்தை ஒட்டி, சமுதாய நிலமாக சுமார் ஆறு ஏக்கர் நிலம் இருந்தது. பக்கத்தி லேயே நெடுஞ்சாலையும் புகைவண்டித்தடமும் சென்றன. எனவே அந்த இடத்தை விலைக்குப் பெற்று. அங்கே ஒரு தொழிற்சாலையோ பள்ளியோ நிறுவ நினைத்தேன். 1942-ல் அதற்கென ஏற்பாடுகளையும் செய்தேன். புளியம் பாக்கத்தில் இருந்த கிராம முனிசிப் இராகவ நாயக்கர் அவர் களும் கணக்கப்பிள்ளை அவர்களும் உதவினர். தங்களுக்குச் சொந்தமான நிலங்களை குறைந்த விலைக்கு (ஏக்கர் ரூபாய் 40/.) விரும்பித் தந்ததோடு மற்றவர்களையும் தர ஏற்பாடு செய்தனர். ஆனால் ஒரு சிலர் தர மறுத்த காரணத்தால் சுமார் நான்கு ஏக்கர் மனையே வாங்க முடிந்தது. எனினும் அதன் பக்கத்திலேயே உள்ள அரசாங்க உரிமையான ஆற்றுப்படுகைக்கு பக்கத்தில் இருந்த சுமார் ஆறு ஏக்கர் நிலத்தை அரசாங்கத்தின் மூலம் கேட்டு வாங்கலாம் எனத் திட்டமிட்டு, செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியருக்கும் விண்ணப்பித்தேன். அதற்கு இடையில் நான் B.O.L. பயில