பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6i அடிக்கடி சென்னையில் வந்து தங்கியதனாலும் தொடர்ந்து இடைநிலை, பட்டப்படிப்புகள் படிப்பதில் முனைந்திருந் தமையாலும் அந்த முயற்சியினைத் தொடர்ந்து மேற் கொள்ள முடியவில்லை. 1944-ல் B.O.L. பட்டப்படிப்பினை முடித்ததும் என் வாழ்க்கை நிலையே மாறிற்று. காஞ்சியில் புதிதாக வ்ந்த தலைமை ஆசிரியரும் என் கீழாகத் தமிழ்த் துறையில் பணியாற்ற வந்த, எனது வாலாஜாபாத் பள்ளி ஆசிரியரும் சேர்ந்து செய்து வந்த செயல்களால் அப்பள்ளி யில் தொடர்ந்து பணியாற்றா நிலைகள் உண்டாயின. எனவே அப் பள்ளியில் இருந்து விலகினேன். அதே வேளை யில் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர் தேவை என்ற விளம்பரத்தினைக் கண்டு விண்ணப்பித்தேன். முயன்று அப்பதவியினைப் பெற்று 27-6-44-ல் பச்சையப்ப ரில் பொறுப்பேற்றேன். இடையில் வாலாஜாபாத்தில் நான் பயின்ற இந்துமத பாடசாலை'யின் நிறுவனர் திரு. வா. தி. மாசிலாமணி முதலியார் அவர்கள் என்னை அப்பள்ளியிலேயே இருந்து கொண்டு அதன் வளர்ச்சியைக் கவனிக்குமாறு கேட்டனர். பல்வேறு காரணங்களால் அது என்னால் இயலவில்லையாயினும், சென்னைக்கு வந்தபிறகு, அவர் விருப்பப்படி, அடிக்கடி வாலாஜாபாத் சென்று அப் பள்ளியின் வளர்ச்சியில் கருத்திருந்தி ஆவன செய்து வந்தேன். வாரத்திற்கு இருமுறையாயினும் சென்று மாணவர், மற்றவர் நலம் கண்டு வருவேன், அதற்கு இடையில் வாலாஜாபாத்தின் கீழ்க்கோடியில் உள்ள புளியம்பாக்கம் நிலத்தில் என்ன செய்யலாம் எனத் திட்ட மிட்டேன். எனினும் சென்னை வாழ்க்கையின் வேலை மிகுதியும் வேறு பல்வேறு சூழல்களும் அந்தப் பணியினைத் தொடரா வகையில் என்னை எங்கோ வேறு வழியில் ஈர்த்துச் சென்றன. எனினும் காலம் வரும் வரும் என்று காத்திருந்தேன். அக்காலம் வேறு வகையில் என்னை இங்கே சென்னையில் அண்ணா நகரில் அன்னைப் பணி யினைத் தொடங்க ஆணையிட்டமையால், இதன் முழு