பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வளர்ச்சியில் ஈடுபடத் தொடங்கியபின் 1980-ல் அப் புளியம்பாக்கம் நிலத்தினை வேறு அறச்செயல் தொடங்கு மாறு வேறு ஒருவருக்குத் தந்துவிட்டேன். எனினும் அங்கே தொடங்க நினைத்த பணியினை விட்டுவிட மனமில்லை. வாலாஜாபாத்திலேயே ஓர் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கலாம் என்ற முயற்சி என் உள்ளத்தில் இருந்தது. ஆயினும் அதைப் போற்றி வளர்க்கக்கூடிய பெரும் பொருளோ வாய்ப்போ எனக்கு அப்போது இல்லை. எனினும் எப்படியும் முயன்று ஒர் உயர்நிலைப் பள்ளி அங்கே இல்லையாதலால், அதைக் கொண்டுவர வேண்டும் என முயன்றேன். நல்லவேளை அதற்கு அப்போது வாலாஜாபாத் பஞ்சாயத்துக் குழுவின் தலைவரும் என்னோடு பயின்றவருமான திரு. தேவராச முதலியார் அவர்கள் உதவ முன்வந்ததால் 1947-ல் தலைவராகவும் நான் செயலாளராகவும் இருந்து ஒரு குழு அமைத்து, இருபத்தையாயிரம் ரூபாய் வசூல் செய்து ஒரு பள்ளியினை அரசாங்கம் அளித்த ஆறு ஏக்கர் நிலத்தில் நிறுவினோம். பேரறிஞர் அண்ணா அவர்கள் அப்பள்ளி நிதிக்கென வாலாஜாபாத்திலே இரண்டு நாடகங்களை நடத்தித் தந்தனர். அத்துடன் அப் பள்ளி தொடங்க எல்லா உதவி களையும் செய்தனர். அரசாங்கத்தின் சார் பி லும் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த திரு. மீ. பக்தவத்சலம் அவர்களும் ஆறு ஏக்கர் நிலம் பெறவும் பிற வகையிலும் உதவினர். பின் அவர்கள் கையாலேயே அப்பள்ளி தொடங்கி வைக்கப் பெற்றது. மாவட்டத் தனி அலுவலராக இருந்த T. புருஷோத்தமர் அவர்கள் பள்ளி அமைய உதவினர். என் அன்னையின் பேரில் இங்கொன்றும், என் எண்ணப்படி புளியம்பாக்கத்தில் இன்றேனும், அங்கே வாலாஜாபாத்தில் ஒர் பள்ளியை நிறுவிய நிலையினை எண்ணி என் மனம் அமைதியுற்றது. பின் அதனைச் செங்கற்பட்டு மாவட்டம் ஏற்க, இன்று அது அரசாங்கப் பள்ளியாய் வளர்ந்து, மேனிலைப் பள்ளியாகி,