பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்குக் கல்வி வழங்குகிற நிலை கண்டு மகிழ்கின்றேன். அதற்குத் துணையாய் அமைந்த அனைவரையும் எண்ணி வணங்குகின்றேன். இப் பணி அனைத்தும் என் கல்லூரிப் பணிக்கு இடையில் அப் பணிக்கு ஊறுநேரா வகையில் நிகழ்ந்தனவேயாம். இவ்வாறு சில ஆண்டுகள் கழிய நான் சென்னையில் அமைந்தகரை செனாய் நகர்ப் பகுதியில் எனக்கென வீடும் எம். லிட் போன்ற உயர் பட்டங்களும் பெற்ற பின்பும் அன்னையின் பெயரால் பணி தொடங்கும் எண்ணம் மட்டும் என் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. 1955-ல் மற்றொரு வாய்ப்பு எனக்குக் கிட்டிற்று. ஆ யி னு ம் அப்போதும் எனக்குப் போதிய வசதி இல்லையாதலால், அப்போது எங்கள் துறைத் தலைவராக இருந்த டாக்டர் மு. வரதராசனார் அவர்களைக் கலந்தேன். வேறு சிலரும் செனாய் நகரில் பள்ளி அமைக்க உதவுவதாக வாக்களித் தனர். மு. வ. அவர்கள் திரு. வி. க. மறைவிற்குப் பின் அவர் பெயரால் சேர்த்து வைத்திருந்த பெருந்தொகை யினைத் தருவதாகவும் திரு. வி. க. பெயராலே பள்ளி அமைக்கலாம் என்றும் கூறினர். அத்தொகை சேர்ந்ததால் எனக்கும் சிறு பங்கு உண்டு. எனினும் எங்களிடம் பெரும் பொருள் வசதி இன்மையின் டாக்டர் சுந்தரவதனம் அவர் களை அணுகினோம். அவர்கள் தலைவராக இருக்க இசைந்ததோடு, பள்ளி வளர்ச்சிக்குப் பெரும் பொருள் தந்து உதவி, இன்றளவும் அப் பள்ளிக் குழுவின் தலைவராக இருந்து உதவி புரிகின்றனர். அன்று செயலாளனாக இருந்த நான், இன்றும் அதன் உறுப்பினனாக இருந்து அதன் வளர்ச்சி கண்டு மகிழ்கின்றேன். அன்னையின் பெயரில் இன்றேனும், அன்னையார் இறுதிச் சடங்கினை எங்கள் ஊர் அங்கம்பாக்கத்தில் தாமே வந்திருந்து நடத்திய திரு.வி க. அவர்கள் பெயரால் பள்ளி அமைந்த நிலையினை எண்ணி எண்ணி மகிழ்கின்றேன்: இன்று மேனிலைப் பள்ளியாக உயர்ந்துள்ள இப்பள்ளியிலும் அதனோடு இணைந்த