பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஆரம்பப் பள்ளியிலும் சுமார் இரண்டாயிரம் மாணவர் பயிலும் நிலைகண்டு திரு. வி. க. வின் அடி நினைந்து போற்றுகின்றேன். என் எண்ணச் சூழல் அத்துடன் நிற்காது மேலும் வேறு வழியில் சுழன்று கொண்டே இருந்தது. இவை பற்றியெல்லாம் முன்னரே குறித்துள்ளேன். மேலும் ஒரு பத்தாண்டுகள் கழிந்தன. இதற்குள் என் வழியில் எத்தனையோ மாறுதல்கள். மனைவி மறைந்தாள். பெண்கள் இருவருக்கும் மணம் முடித்தேன். மகன் மெய்கண்டானுடன் நான் தனியாக வாழ்ந்து வந்தேன். 1965ல் நான் சேலம் மாவட்டம் ஏர்க்காட்டில் ஓர் இடம் வாங்கினேன். கோடை நாட்களிலெல்லாம் அங்கே சென்று தங்குவேன். சில சமயம் பிள்ளைகளோடும் சில சமயம் சக ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் தங்குவது வழக்கம். அப்போது அங்கே ஓர் எண்ணம் உதித்தது. ஏன் இங்கேயே அன்னைக்கு ஒரு நிலைத்த பணி செய்யக் கூடாது என்ற எண்ணம் உண்டாயிற்று, நான் இருக்கும் இடத்தினைச் சுற்றி மலைச் சரிவுகளில் நிறைய இடங்கள் இருந்தமையின், ஒர் கல்லூரியே அன்னையின் பேரால் உருவாக்கலாமே என்ற எண்ணம் உண்டாயிற்று, இதற்கென ஏர்க்காடு நகரிய ஆணையர் வாயிலாக, அரசாங்கத்துக்கு இடம் தர வேண்டி விண்ணப்பம் அனுப்பினேன். அப்போது ஆணையர்களாக இருந்த திருவாளர்கள் அருணாசலம், காளிதாசர் ஆகியோர் என் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து ஆவன செய்தனர். ஊரில் இருந்த ஒரிரு பெருஞ் செல்வர்களும் பெருந்தொகை தருவதாக வாக்களித்தனர். அவர்கள் எழுதிய க்டிதங்கள் இன்னும் உள்ளன. நகரியம் அப்போது சுமார் 200 ஏக்கர் நிலத்தில் புதுநகர் அமைக்கத் திட்டம் தீட்டி, அதில் சுமார் 40 ஏக்கர் கல்லூரிக்கென ஒதுக்கி, அரசாங்க ஒப்புதலுக்கு அனுப்பினர். அது முறைப்படி சென்னை மேநிலைப் பொறியாளர், அரசாங்கப் பிற துறையினர் பார்வைகளி ளெல்லாம் பட்டு, முடிவில் அதற்கென இசைவும் தரப் பெற்றது. 25.3.68. நாளிட்ட S.O.C. 104 6, 8 AC