பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 எண்ணுள்ள நகரியக் கடிதத்தின் வழியே அனைத்தும் செயலாக்கப் பெற்றன. பின் ந. க. 4070/69 எண்ணுள்ள 10.9.69. நாளிட்ட நகரிய ஆணையர் கடித வழியும் சேலம் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் (District Revenue. Officer) &th Eudn. No. Dist - 31 - 474167 - 998.33 எண்ணுள்ள 26.11.67 குறிப்பின் வழியும் ஆணையர் தம் 20.11.68 நாளிட்ட கடித வழியும் நில ஒதுக்கீடு உறுதி செய்யப் பெற்று, அதுபற்றி எனக்கு அறிவிக்கப் பெற்றது. அப் போது நான் முனைந்திருந்தால் அங்கே ஒரு மகளிர் கல்லூரி, என் அன்னையின் பேரால் மலர்ந்து சிறந்திருக்கும். ஆயினும் அதற்குள் இங்கே வீட்டில் வள்ளியம்மாள் பள்ளியினைத் தொடங்கி விட்டேன். அண்ணா நகரிலும் கட்டடம் உருவாகி 1969 அக்டோபரில் பள்ளியும் தொடங்கப் பெற்றது. பல ஆண்டுகள் கழித்து, சென்ற ஆண்டு ஏர்க்காட்டில் மறுபடியும் ஓர் உயர்தரமான கல்வி நிலையம்-ஆய்வுப் பட்டங்கள்-தொழில் பயிற்சிகள் கொண்ட நிலையில் தொடங்கலாமா எனத் திட்டமிட்டேன். நான் சென்ற ஆண்டு உலகப் பயணத்தை மேற்கொண்டபோது, அதற்கு முன் காஞ்சிப் பெரியவரை-இங்கே சென்னையில் கண்டு வணங்கி, என் கருத்தினைத் தெரிவித்தேன். அவர்கள் நம் வள்ளியம்மாள் பள்ளியில் புதிய கட்டிடங்கள் கட்டியபின் வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து பள்ளியை வாழ்த்தி யருளினார்கள். ஏர்க்காடு பற்றிய என் கருத்தினைக் கூறியதும், என்னால் முடியாவிட்டாலும் மடத்தின் மூலமாக நடத்தலாம் என்றும் முயன்று இடத்தினைப் பெறுங்கள் என்றும் வாழ்த்து வழங்கினர். எனினும், நான் உடனே உலகப் பயணத்தை மேற் கொண்டமையின் இடையில் நான்கைந்து மாதங்கள் தடைப்பட்டன. பின் சேலம் சென்று அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. பழநிச்சாமி அவர்களையும் ஏர்க்காடு நகரிய ஆணையரை யும் கண்டு விண்ணப்பித்தேன். ஆணையர்தம் ந.க எண் தி.தி.-5