பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. 526/86 அ2 நாள் 15.5.86 எண்ணுள்ள கடிதப்படி எனக்கு நிலம் ஒதுக்கப் பெற்றதாகவும், அன்று இனாமாகக் கொடுக்க இருந்த நிலைமாறி, நல்ல விலைக்கே தருவதாக வும் தகவ்ல் பெற்றேன். இடையில் கழிந்த இருபது ஆண்டு களில் அரசாங்கத்துறைகள் சிலவும், தனியார் சிலரும் (நான் வர்ளா இருந்தமையின்) அந்த நாற்பது ஏக்கரில் பெரும் ப்ரப்பைக் கைப்பற்றினர். தற்போது பத்து ஏக்கருக்கு குறையாமல் பெற வாய்ப்பு உண்டு என நம்புகிறேன். அதை விரைவில் பெற்று அங்கே தக்க ஆய்வு, தொழிற்கூடம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இறைவன் திருவுளமும் அன்னையின் அருளும் கைகூடின் யாவும் எளிதாகும்! இடையில் 1966-67ல் ஓராண்டு தமிழக அரசாங்க ஆணையின் பேரில் நான் ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பொறுப்பேற்கச் சென்று அங்கே "Ph.D' என்ற டாக்டர் ஆய்வுப்பட்டத்திற்காக ஏற்பாடுகளை செய்ய நேர்ந்தமையின் என் ஏர்க்காடு முயற்சி இடையில் தடைப்பட்டது. ஒருவேளை அங்கே செல்லாதிருந்திருப்பின் 1967லேயே உறுதி செய்யப் பெற்று கல்லூரி தொடங்கப் பெற்றிருக்கும். எல்லாம் இறையருளும் காலத்தின் கோலமும் போலும். கல்லூரி தொடங்க இசைவு பெறுமுன் இங்கே பள்ளி தொடங்கியது மட்டும் அதற்குக் காரணம் என்று கூற முடியாது. கல்லூரி தொடங்குவதாயின் ஐந்துலட்சம் பல்கலைக்கழகத்துக்கு ஒப்புதல் நிதியாக ஒப்படைக்க வேண்டும். ஒதுக்கிய நாற்பது ஏக்கரில் உள்ள மேடு பள்ளங் களைத் திருத்திச் சமமாக்கி, காடு கொன்று நாடாக்கிச் சாலை அமைத்துச் சரி செய்ய வேண்டும். பின் கட்டடங்கள் ஆய்வு களம், விடுதி முதலியன அமைக்க வேண்டும். அவற்றுக்கெல்லாம் குறைந்தது பத்துப்பதினைந்து லட்சங் கள் தேவைப்படலாம். அந்தப் பெருந்தொகையை என்னால் அன்று நினைத்துக் கூடப் பார்க்க இயலவில்லை. ஓரிருவர்