பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6? தருவதாகச் சொல்லிய தொகையும் வரும் என்று நம்ப முடியாத வகையில் நிலைமாறின. எனவே இதனாலும் அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன். சிலர் உயர்நிலைப் பள்ளியையாயினும் நல்ல விடுதியோடு தொடங்கலாம் என்றனர். ஆயினும் அங்கே பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் ஏசுவின் தொண்டர்களால் இருபள்ளிகள் விடுதிகளுடன் சிறக்க நடைபெறுவதால் அவர்களுக்குப் போட்டியாக நான் புதிதாக ஒர் பள்ளி தொடங்க விரும்பவில்லை. அதே கருத்தில்தான் இங்கே அண்ணாநகரில் இது வளருமோ வளர்ாதோ என்ற ஐயத்தில் யாரும் முன்வராத அந்த நாளில், ஒரு போட்டியும் இன்றி இந்த வள்ளியம்மாள் பள்ளியினை நான் முதலில் தொடங்கினேன். இந்த வகையில் தோன்றிய இப்பள்ளியின் வளர்ச்சியினை இனி எண்ணிப் பார்க்கலாமா! இந்த வள்ளியம்மாள் பள்ளியினைத் தொடங்குமுன் பல வகையில் யோசனை செய்தேன். அன்று இருந்த விதிப்படி, இன்னும் ஓரிரு ஆண்டுகளில் (55ல் ஓய்வு) கல் லூரியிலிருந்து விடுதலை பெறுவேன் என்ற எண்ணத்திலே, பள்ளி வளர்ச்சி யில் முழு நேரம் செலுத்தலாம் என எண்ணினேன். மேலும் என் மக்கள் மூவருக்கும் மணம் முடித்து அவரவர் வாழ்க்கை அமைய எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தேன். ஊரில் உள்ள நிலங்களில் பலவற்றை விற்று அவர்களுக்கு தனித் தனியே வாழ்வுக்குப் போதுமான வாடகை வரும் வகையில் வீடுகளும் கட்டித் தந்து விட்டேன். வாழ்க்கைத் துணைவியோ இல்லை. எனவே கல்லூரியிலிருந்து ஒய்வு பெற்றபின் காலம் கழிப்பது கடினமல்லவா! எனவே அதற்கு ஒரிரு ஆண்டுகளுக்கு முன்பே இப்பள்ளியினைத் தொடங்கி வளர்த்து விட்டால் அதில் பயிலும் இளங் குழந்தைகளின் முகம் பார்த்து மீதி நாட்களையும் கழிக்கலாம் எனத் திட்ட மிட்டேன். அதேபோது எனக்கு அண்ணாநகர் 178 எண்ணுள்ள நிலத்தை கடைகளுக்கென ஒதுக்கிய பழைய இடத்தின் பக்கத்திலேயே அமையுமாறு ஒதுக்கப்பெற்றேன். அந்த ஒதுக்கீட்டுக்குப்பின் அதிக்நிலம் பெற எனக்கு வாய்ப்