பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை என் வாழ்க்கை வரலாறு முறையாக எழுதப் பெற வில்லையாயினும், இளமையின் நினைவுகள்' என்ற நூலில் என் பள்ளிப் படிப்பு முடிந்த வரையிலும் (17 வயது) "காஞ்சி வாழ்க்கை' என்ற நூலில் நான் காஞ்சியில் ஆசிரியனாக இருந்த வரையிலும் (30 வயது) ஒரளவு என் வாழ்க்கையினைக் குறித்துள்ளேன். 1944ல் சென்னை வந்த பிறகு கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளின் வாழ்க்கை யினைப் பற்றிய குறிப்பு எத்தனையோ உள்ளன. எனினும் அவற்றைத் தொகுத்து நூலாக்கவில்லை. ஆனால் என் அன்னையின் பெயரால் அறம் நிறுவிப் பள்ளிகளைத் தொடங்கிக் கடந்த பதினெட்டு ஆண்டுகளில் நடந்த சில நிகழ்ச்சிகளை மட்டும் இங்கே இந்த நூலில் குறித்துள்ளேன். இங்கேயும் அனைத்தையும் குறித்து விட்டேன் என்று கூற முடியாது; ஒரு சிலவே இடம் பெற்றுள்ளன. வள்ளியம்மாள் கல்வி அறம் தொடங்கிப் பதினெட்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த பதினெட்டு, வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஓர் எண் என்பதை நூலினுள் (பக் - 21. 22) குறித்துள்ளேன். குழவிப் பருவம் கடந்து தெளிந்த வயதடையும் பருவமும் இதுதான். எனவேதான் இந்த நூலின் பெரும் பகுதியினை நான்கு ஆண்டுகளுக்கு முன்னமே எழுதினேன் ஆயினும் இப்போது வெளியிடுகின்றேன். நூலில் சில பகுதிகள் ஒரிரு முறை திரும்பத் திரும்ப வந்திருக்கும். அது கூறியது கூறல் என்ற குற்றத்தின் பாற் படும் என்பதறிவேன். எனினும் அந்தந்த இடத்திற்கு அவை எழுதப் பெறாவிடின் தொடர்பும் பொருத்தமும் தவறும் என்ற காரணத்தாலேயே அவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் திரும்பத் திரும்ப எழுதியுள்ளேன். இந்நூலில் சிலவிடங்களில் நலம் செய்தாரைப் போற்றி வாழ்த்தியும் சிலவிடங்களில் அவலம் செய்தாரைச் சுட்டியும்