பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பினைத் தந்தது. மேலும் நான் முன்னரே குறித்தபடி, என் நூல் ஒன்று கல்லூரி வகுப்பிற்குத் தொடர்ந்து இரண்டாண்டு பாடமாக இருந்தமையின் ஒரு பெருந்தொகையும் வந்தது. அத்துடன் என் உயர் ஒப்பந்த நிதியும் தெய்வீக நீதியும் (Provident Fund) Griffioso. stayGas இடமும் சற்றே பெருந்தொகையும் கிடைத்த காரணத்தாலேயே 1968ல் வீட்டில் தொடங்கிய பள்ளியினைப் பின் விரிவுபடுத்த, அண்ணா நகரில் 178ல் கட்டிடத்தைத் தொடங்கினேன், முதலில் 1969ல் முதல் கட்டிடத்தின் கீழ்த்தளம் (Ground floor) unli-69th அமைத்து, நல்ல நாளில் (விசயதசமி) பள்ளி யினைத் தொடங்கினேன். அத்துடன் கட்டிடத்திறப்பு விழாவும் நடைபெற்றது. இரண்டினைப் ப ற் றி ய கல்வெட்டுக் குறிப்புகள் வாயிலின் இருபக்கங்களிலும் அணி செய்கின்றன. - - 1968 ஜூன் 21ல் வீட்டில் பள்ளி தொடங்கப் பெற்றது. முதல்வருடன் ஐந்து ஆசிரியர்கள் நியமனம் பெற்றனர். ஆயினும் முதலில் மூன்று. மாணவர்களே சேர்ந்தனர். அப்போது பள்ளிச் சம்பளம் பத்து ரூபாய்தான். L.K.G. U.K.G. முதல் வகுப்பு என்ற மூன்றையுமே முதலில் தொடங்கினேன். அப்போது வீட்டில் பக்கத்தில் வேறு சில சிறு பள்ளிகள் தோன்றின. ஆண்டின் இறுதியில் எங்கள் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை நாற்பத்தொன்பதாக அமைந்தது. ஆனால் ஆசிரியர்களுக்கு ஆயிரத்துக்குமேல் சம்பளம் தர வேண்டியிருந்தது. நான் கல்லூரியில் பெற்ற சம்பளத்தை அப்படியே கொண்டுவந்து கொடுத்துச் சரிக் கட்டுவேன். இவ்வாறு.1968ல் அமைந்தகரை ஐயாவு தெரு 18ல் தொடங்கப் பெற்ற பள்ளியே மெல்ல மெல்ல வளர்ந்து இன்று மூன்று இடங்களிலும்,_2000 பிள்ளைகளுடன் 85 ஆசிரியர்களையும் கொண்டு பதிவு செய்யப் பெற்ற குழுவின் வழியும் வள்ளியம்மாள் கல்வி அறத்தின் கீழும் செயலுற்று வளர்கின்றது. ஆண்டுதோறும் பள்ளியில் பல விழாக்களை அன்று தொட்டுத் தொடங்கி நடத்தி வருகிறோம். வள்ளியம்மாள்