பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 இவர்களேயன்றி ஆசிரியர் விழா, பாரதி விழா, பொங்கல் விழா, விளையாட்டு விழா, குழந்தைகள் விழா போன்றவற்றிற்குப் பல பேரறிஞர்களும், அரசாங்க அமைச் சர்களும் தொழிற் விற்பனர்களும், பேராசிரியர்களும் வந்து கலந்து கொண்டுள்ளனர். அவர்களுள் நாவலர் நெடுஞ் செழியன், டாக்டர் அண்டே, திருவாளர்கள் இராம. வீரப்பன். திரு K. A. கிருஷ்ணசாமி, திரு. டாக்டர் R. P. சிங்கேல் (மத்திய கல்விக் குழுத் தலைவர்) கற்கண்டு ஆசிரியர் தமிழ்யாணன், பல பத்திரிசுை ஆசிரியர்கள், அமெரிக்கா பழநி பெரியசாமி திரு. குன்னுக்கல் (தலைவர் BSE) இராகவானந்தம், போன்றவர் குறிப்பிடத்தக்கவர்கள். காஞ்சி காமகோடிபீட சுவாமிகள், திருமுருக கிருபானந்த வாரியார் அப்புமலையின் அருள்மிகு அடிகளார், சின்மய மடத்தினைச் சேர்ந்த அருள்மிகு சின்மையானந்தர் போன்ற அறநெறியாளர்களும் பள்ளியை வந்து பார்வையிட்டு வாழ்த்தியுள்ளனர். முன்னைய பள்ளி கல்வித் துறைத் தலைவர் திரு. லாரன்ஸ், கல்வித்துறைத் தலைவர்கள் டாக்டர் வெங்கடசுப்பிரமணியம் பிள்ளை திரு. இராயன் இன்றைய தலைவர் திரு. கோபாலன் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் டாக்டர் மு. வரதராசனார் டாக்டர் வ. சுப மாணிக்கம் போன்ற பெருமக்களும் பள்ளியினைப் பார்வையிட்டுள்ளனர். ரோலிங் ஷட்டர்கள் உரிமையாளர் திரு.S.V. நரசிம்மன் போன்ற தொழில் அதிபர்களும் திரு. R. கிருஷ்ணமூர்த்தி போன்ற பேராசிரியர்களும் பள்ளியினை வந்து கண்டு வாழ்த்தியுள்ளனர். இரஷ்ய நாட்டு தூதரக உறுப்பினர், ஆங்கில அமெரிக்க நாட்டினர் போன்ற மேலை நாட்டினரும் பள்ளியினைப் பார்வையிட்டுள்ளனர். இலங்கை அமைச்சர் இராசதுரை அவர்களும், சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை நகரமேயர், துணை மேயர்களும், பிறரும் பள்ளி யினைப் பார்வையிட்டுள்ளனர். மத்திய கல்விக் குழுவினைச் சேர்ந்த தலைவர்கள், செயலர்கள் ஆகியோரும் அடிக்கடி