பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பார்வையிட்டுள்ளனர். இத்தகைய பெரியார்களுடைய நல்வாழ்த்தின் வளத்தாலும் நல்லன்பர் தம் ஆதரவினாலும் பள்ளி மேன்மேலும் வளர்ச்சியுற்று வந்துள்ளது. இவர் களின் வாழ்த்துகளையெல்லாம் தொகுத்துத் தனியாக இந் நூலில் மற்றோரிடத்தில் தந்துள்ளோம். இவ்வாறு பல்வேறு வல்லவரும் நல்லவரும் வாழ்த்த வளர்ந்து வரும் பள்ளியின் மாணவர் ஆசிரியர்தம் எண்ணிக் கையும் ஆண்டுதோறும் வளர்ந்து கொண்டே வருகின்றது. பள்ளியில் சேர்வதற்குத் தகுதி ஒன்றே அடிப்படையாக் அமைகின்ற காரணத்தால், வரையறுத்த அளவிலேயே ஆண்டுதோறும் பிள்ளைகள் சேர்க்கப் பெறுகின்றனர். தேர்வு இல்லாது, வந்தவர் அனைவரையும் சேர்த்திருந்தால் மொத்தத்தில் இன்று நாலாயிரம் பேர் இப்பள்ளிகளில் இடம் பெற்றிருப்பர். எனினும் தகுதியென ஒன்று நன்றே" என்ற ஆன்றோர் மொழிப்படியே தகுதியை மட்டும் கருத்தில் கொண்டு பிள்ளைகளை ஏற்று வருகிறோம். இதனால் பலருடைய விரோதத்தையும் சம்பாதிக்க நேருகிறது. என் செய்வது? நல்லது செய்தவர் யார் அல்லில் பட்டுழலாது நின்றார்? இதுதான் நியதி போலும்! பலர் நன்கொடை தருவதாகச் சொல்லித் தகுதியில்லா வகுப்பில் பிள்ளைகளைச் சேர்க்கச் சொல்லுவர். நாங்கள் அறிக்கையில் குறிப்பிட்ட தொகையைத் தவிர்த்து வேறு பெறுவதில்லை என விளக்கி அனுப்பினோம்: சில சமயம் ஒரு சிலர் உயர் மட்டத்தில் அமைச்சர் போன்றாரிடம் சொல்லி இடம் பெற முயல்வர். அவர்களும் தொலைபேசி வழியும் கடிதங்கள் வழியும் எங்களுக்குச் செய்தி சொல்லுவார்கள். ஆயினும் நாங்கள் பின்பற்றும் முறையினையும் அவர்கள் பரிந்துரைப்பார் தகுதியினையும் தரத்தினையும் சொன்னால் நாங்கள் செய்வதே சரியெனக் கூறி எங்களை வாழ்த்துவர். எனவே அந்தத் தகுதி என ஒன்றின் அடிப்படையிலேயே பள்ளி வளர்கின்றது.