பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 I984 ー 1342 1407 س- 1985 1986 — 1442 (நர்சரி வகுப்புகள் உட்பட செஞய் நகரில் (தனி) குழந்தைகள் பள்ளி தற்போது 242) - பிள்ளைகள் வளர வளரக் கட்டடங்களும் வளர வேண்டிய தேவை உண்டாயிற்று. 1969-ல் கீழ்த்தளம் மட்டுமே அமைத்த கட்டிடத்தில் 1971-1972-ல் மேல் இரண்டு தளங்களையும் கட்டி முடித்தோம். அதற்கு மேல் எங்களுக்கு அப்போது வேறு இடமில்லையாதலால் கட்டடம் அந்த அளவில் நிறுத்தப்பெற்றது. எனினும் பக்கத்தில் கடைகளுக்காக ஒதுக்கி இருந்த இடம் காலியாகவே இருந் தமையால் அதை விளையாடும் இடமாகக் கொண்டோம். அதற்கிடையில் எங்கள் வளர்ச்சிக்காக வீட்டு வசதி வாரியத்தாரைப் பக்கத்தில் உள்ள இடத்தினை ஒதுக்கித் தருமாறு வேண்டினோம். முதலிடம் (178) எனக்கெனத் தனியாக ஒதுக்கப் பெற்றதென்பதை முன்னரே குறித் துள்ளேன். அந்த இடத்தையும் வேறு பல பொருள்களை யும் என் நூல் வருவாயினையும் பள்ளிக்கென நன்கொடை யாக 1969லேயே ஆவணம் செய்து கொடுத்துவிட்டேன். எங்கள் வேண்டுகோளை வீட்டுவசதி வாரியத்தினரும் தமிழக அரசினரும் (Lt. No. 42267 (B) H. O. 1. (3)/71/dt. 16.8.71) ஏற்றுக் கொண்டு வடக்குப் பக்கத்தில் உள்ள 6 மனை 2.140 சதுர அடியினை ஒதுக்கித் தந்தனர். 10-12-71 அன்று அதை நாங்கள் எடுத்துக் கொண்ட்ோம். எங்கள் வளர்ச்சியினையும் தளராத தொண்டினையும் கண்ட வீட்டு வசதி வாரியத்தார் தென்புறத்திலுள்ள மற்றொரு பாதி யினையும் தாமே வலிய வந்து எங்களுக்குத் தர விரும்பினர். அவர்களுடைய 1-4-72-ல் நடைபெற்ற மார்க்கெட்டிங் குழு'வில் முதல் தீர்மானமாக இதை நிறைவேற்றி எங்களுக் குத் தர இசைந்து, எங்கள் விருப்பத்தினையும் கேட்டனர். கரும்பு தின்னக் கசக்குமா? எங்கள் பொருளாதாரம் அதற்கு இடம் தரவில்லையாயினும் அதற்கும் இசைந்தோம். அந்த