பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 இடம் எங்களுக்கு 10-2.73-ல் ஒப்படைக்கப் பெற்றது. அதுகாலை திரு. T. W. வாசுதேவன் அவர்கள் வாரியத் தலைவராகவும் அதே வேளையில் அரசாங்கச் செயலராக வும் இருந்தார். அவர்கள் நல் உதவியை எண்ணி இன்றும் அவருக்குத் திசை நோக்கி வணக்கம் செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். இங்கே அமைக்க இருந்த கடைகளை எதிர் பக்கத்துக்கு மாற்றி, அங்கே குறித்த வீட்டுமனைகளை வ்ேறிடத்தில் இட்டு எங்கள் பள்ளிவர வழிகண்ட வீட்டுவசதி வாரியத்தை என்றும் மறக்க இயலாது. ஆயினும் அது போது, இந்த இடம் தரும் பணியைத் தாங்களே செய்த தாகச் சொல்லி அவ்வாரியத்தில் பணியாற்றிய இருவருக்குக் கையூட்டாகச் சில ஆயிரம்கள் தர வேண்டும் என ஒருவர் கேட்டார். நான் நடந்த செயல் அறிந்தவனாத்லால் உள்ளத்தில் சிரித்துக் கொண்டே அவர் கேட்பது முறை யற்றது என்றும் தர இயலாது என்றும் சொன்னேன். அதை மனத்தில் வைத்துக்கொண்டு பல ஆண்டுகள் அவர்கள் எனக்கு ஏதேனும் இடையூறுகள் செய்து கொண்டே வந்த னர். அவர்களைப் பற்றி ஒரளவு மேலிடத்துக்கும் தெரியும். நானும் அன்றாயினும் சரி இள்றாயினும் சரி அவர்களைப் பற்றி ஒன்றும் சொல்லுவதில்லை; இனியும் சொல்ல மாட்டேன், சொல்லவும் தெரியாது; மறந்துவிட்டேன். அதனை மறத்தல் அதனினும் நன்று' என்றாரே வள்ளுவர். அவர்கள் இடும் முட்டுக்கட்டைகளெல்லாம், எங்கள் செயலறிந்த மேலுள்ளவர்களாலும் இறையருளாலும் தீர்க்கப்பெற்று யாவும் செம்மையாக அமைகின்றன. எங்கோ சென்றுவிட்டேன்; மன்னிக்க. நான்கில் ஒரு பகுதியினை (உரிய விலையில்) கட்டி இடத்தினை நாங்கள் எடுத்துக் கொண்டோம். என்றாலும் தொடர்ந்து கட்டவேண்டிய தொகையைத் தவணை தோறும் கட்ட இயலவில்லை. மொத்தத்தில் பெருந்தொகையாக அமைந்துவிட்டமையால் ஆறு திங்களுக்கு ஒருமுறை இருபதாயிரம் கட்ட வேண்டி இருந்தது. அதைக் கட்டி,