பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 முடியாது ஓரிரு ஆண்டுகள் நாங்கள் திகைத்தோம். அப்போது நான் மேலே காட்டிய ஓரிருவரால் கடும் நடவடிக்கை எடுக்கப்பெறும் என எச்சரிக்கப் பெற்றோம். எனினும் அதுபோது வீட்டுவசதி வாரியத் தலைவராய் இருந்த திரு. இலெட்சுமிகாந்தம் பாரதி அவர்கள் தவணை நிலையில் சலுகைக் காட்டி மூன்று வருடம் கட்ட வேண்டி, யிருந்ததை ஏழு வருடத் தவணையாகப் பதினான்கு முறை யில் கட்ட ஆணை தந்தனர். அதன்படி முழுத் தொகையும் கட்டி அதற்குரிய ஆவணத்தினைப் பின்னர் பெற்றுவிட் டோம். முன்னே காட்டியவர்கள் இடும் முட்டுக்கட்டைகள் தகர்ந்து முற்றிய ஆவணம் பதிவு செய்யப் பெற்றது . இதற்கு இடையில் எங்கள் பள்ளி எந்தத் தேர்வுக்குத் தகுதியாய் இருந்தது என்பதைப் பற்றி எண்ணி எண்ணித் திகைத்தோம். பள்ளிக்குழுவினையும் (எழுவர்) உரியமுறை யில் 1860ஆம் ஆண்டு சட்டப்படி 1971ல் (225) பதிவு செய்து விட்டோம். தமிழ் நாட்டு மெட்ரிகுலேஷன் முறைப்படி பதிவு செய்ய முயன்றோம். நான் முன்னரே காட்டியபடி துணைவேந்தர் அவர்கள் முழுத்தொகையும் (இரண்டு லட்சம்) கட்டி, கட்டடம் முதலியனவும் காட்டினாலன்றி இசைவு தர முடியாது என்றனர். அதே வேளையில் 1972ல் மத்திய கல்விக் குழுவின் செயலர் (பின்னர் தலைவராயினர்) திரு. டாக்டர் சிங்கேல் (Dr. Singhal) அவர்கள் வேறு பணியின் பொருட்டுச் சென்னை வந்திருந்தார். அப்போது நாங்கள் ஏழாம் வகுப்பு வரையிலேயே வைத்திருந்தோம். அவர்களைப் பள்ளியினை வந்து பார்வையிட வேண்டி னோம். அவர்களும் வந்து பார்வையிட கட்டிடம் பக்கத்து இடம் முதலியன போதுமென்றும் ஆய்வுகளம் நூல்நிலையம் நன்கு அமைய வேண்டும் என்றும் எட்டாம் வகுப்புத் தொடங்கிய உடனே விண்ணப்பிக்கலாம் என்றும் சொல்லி எங்களை ஊக்குவித்தனர். பத்தாயிரம் கட்ட வேண்டு மென்றும் இன்றெல் முதல் தவணையாக ஐயாயிரத்தையும் அடுத்த ஆண்டு மிகுதி ஐயாயிரத்தையும் கட்டலாம் என்றும்