பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 உள்ளேன். அவலம் செய்தாரைக் குறை கூற வேண்டும் என்று கருதினேன் அல்லேன். நடைபெற்றவைகளை அப்படியே குறிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே சுட்டி யுள்ளேன். ஒரு வேளை அவர்கள் அவ்வாறு மாறுபட்டு நின்றில்லையானால் நான் தருக்கு மிக்கவனாகி நிலை கெட்டிருப்பேனோ எனவும் அஞ்சுகிறேன். எனவே அவர் களுக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டவனாவேன். என் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியே இது எனச் சுட்டினேன். நான் சென்னைக்ரு 1944ல் வந்து பச்சையப் பரில் பணி ஏற்றேன். வள்ளியம்மாள் கல்வி அறம் 1968ல் தொடங்கப் பெற்றது. எனவே இடையில் நின்ற கால் நூற்றாண்டில் அமைந்த என் வாழ்க்கை வரலாறு இடையில் தடைப்பட்டு நிற்கின்றது. இந்நூலிலேயே ஆங்காங்கே அந்த இடைவெளியில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டுள் ளேனாயினும் அவை முற்றிய வரலாறு ஆகா. அக்காலம் பற்றிய குறிப்புக்கள் ப ல வ ற் ைற த் தொகுத்து வைத்துள்ளேன். வாய்ப்பும் வசதியும் ஒய்வும் உழைக்கும் திறனும் ஒருங்கே அமையின் விரைவில் அந்த இடை வெளியினை நிரப்பும் வகையில் நூலை எழுதி முடிப்பேன். நவ்லவர்தம் வாழ்த்து முற்றும் உடன் அமையும் எனும் துணிபுடையேன். நான் வெறும் தமிழாசிரியனாக இருந்ததோடு நின்றிருப்பின், ஒய்வு பெற்றபின் வேறு பதவிகள் நாடியோ வேறு வகையில் வல்லாரை நாடி வளம் பெறவோ நினைத் திருப்பேனாயின், இத்துணை பெரியவர்கள் தொடர்பும் பொது மக்கள் தொடர்பும் அவர்களொடு நெருங்கிப் பழகும் வாய்ப்பும் எனக்குத் கிட்டியிருக்காது. தமிழாசிரியன் ஒருவன் இத்தகைய பள்ளியை நடத்துவதா?" என்று கேட்பார் ஒருபுறம் இருந்தபோதிலும், என் ப்னிக்குப் பலர் உடனிருந்து ஒல்லும் வகையில் செல்லும் வாயெல்லாம் உதவிய பெருந்தன்மையினை எண்ணி அவர்கள் அனை வருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.