பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 ஏற்பட்டது. மும் மொழித்திட்டமும் உயரிய பாட அமைப்பு முறையும் செயலாக்கப் பெற்றன. பெற்றோர்களும் கவலையற்று, தங்கள் பிள்ளைகளுக்கு மேல் படிப்பிற்கும் வழி ஏற்பட்டமையின் மகிழ்ந்து எங்களை ஊக்கினர். இதற்கிடையில் மாணவர் எண்ணிக்கை பெருகவே புதிய கட்டடங்கள் தேவையாயின. போதிய பணவசதி இன்மையில் தென்னங்கீற்றால் அமைந்த குடில்கள் அமைத்து, அதில் சில வகுப்புகளை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மழைக்காலங்களில் அவற்றிற்குச் செல்வதும், சாரல் வாராமல் பார்ப்பதும் மிகவும் கடினமாக இருந்தன. ஒரு கோடையில் ஒரு குடிசை பற்றிச் சாம்ப லானது. ஒரு மழையில் ஒரு பெருங்குடில் சரிந்து வீழ்ந்தது. அதனால் யாருக்கும் எந்தவித சேதமும் இல்லை. அவற்றுள் சாமான்கள், சிமிட்டி, மரச் சாமன்கள் முதலியன அகப் பட்டமையால் சில ஆயிரங்கள் நஷ்டத்துக்கு உள்ளானோம். எனினும் உளம் தளராது தொடர்ந்து கட்டடம் தொடங்கத் திட்ட மிட்டோம். அப்போது கையில் பணம் இல்லை. அந்தநாளில் ஒரளவு வரவுக்கும் அன்றாடச் செலவுக்கும் கணக்கு சரியாக இருந்தது. பள்ளியை நடத்த எனக்குப் வருவாய்க்கு வசதியற்ற பொருளில்லா நிலை உண்டாயிற்று. 178ல் முதல் கட்டிடத்துக்கு என் வருவாய் அனைத்தும் இட்டமையின் இதற்கு வேறு வழியில்லை. எதிர்பாராது எனக்கு அறுபத்திரண்டு வயது வரையில் பச்சையப்பரில் இடந்தந்தமையாலும் துணை முதல்வராக உயர்த்தப் பட்டமையாலும் அரசாங்கமே அனைவருக்கும் ஊதிய உயர்வு தந்தமையாலும் என் வருவாய் சற்று உயர்ந்தது. அதில் மிகுதி உள்ளதையும் ஊரில் உள்ள நிலங்கள் சில வற்றை விற்றுப் புதிய கட்டிடம் தொடங்க முயன்றும் இயலவில்லை. எனவேதான் நாடகம் நடத்திப் பொருள் ஈட்டலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று. நாடகம் நடத்திப் பொருள் பெறுவது எனக்குப் புதிய அனுபவம். வாலாஜாபாத் பள்ளிக்கு அண்ணா நாடகத்தை