பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79° 1947ல் நடத்திய போது இருந்த சூழல் வேறு. அது சொந்த ஊர்: அண்ணாவுக்கும் அப்படியே. மேலும் பசஞ்ாயத்துத் தலைவர் இருந்தார். எனவே ஓரள்வு வெற்றி காண முடிந்தது. இங்கே 1973ல் நான் தனியாகச் செயல் பட நேர்ந்தது. மேஜர் சுந்தரஜாசன் அவர்களை நாடகம் நடத்தித் தருமாறு வேண்டினோம். அதற்குப் பள்ளியின் பெற்றோரும் பள்ளியின் அருகே இருப்பவருமான திரு. இராச சேகரன் அவர்கள் பெரிதும் உதவினர். மேஜர் சுந்தரராஜன் அவர்கள் நாடகம் பெரியார் திடலில் நன்கு நடைபெற்றது. அப்போது பெற்றோர் சங்கத் தலைவராக இருந்த திரு. கண்ணன் அவர்கள் வசூல் பெருக நன்கு உதவினர். செலவெல்லாம் போக இருப்பத்தைந்தாயிரத் துக்குக் குறையாது நின்றது. என்றாலும் அதனால் பல பெற்றோர்தம் வசவையும் பெற்றோம். வசதி உள்ளவர் களே பேசி வழக்காட வந்தனர். சாதாரண மக்கள் தாராள மாக உதவினர். ஆயினும் நாங்கள் யாரையும் கட்டுப்படுத்த வில்லை. சிலர் வலிய வந்து உதவினர்; சிலர் வாரி வழங் கினர். ஒரு சிலரால் பெற்ற இடர்ப்பாடுகளே அதிகம். இதை உணர்ந்த காரணத்தாலேயே அடுத்து அத்தகைய நாடக முயற்சியில் என்றும் தலையிட வேண்டாம் என முடிவு செய்தோம். அந்த ஆண்டிலேதான் மாணவர்தம் முதல் சம்பளத்தோடு வளர்ச்சிக்கென புதியவராய் இருந்தால் ஐம்பதும் பழையவராய் இருந்தால் இருபத்தைந்தும் ஆண்டு தோறும் வாங்க வேண்டும் என முடிவு செய்து அதன்படியே வசூல் செய்தும் வருகிறோம். அத்தொகையே கட்டடம் முதலியவற்றிற்கு உதவுகிறது. எங்கள் கட்டடங்களின் வளர்ச்சியினையும் பிற வளர்ச்சிகளையும் நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெறும் தரத்தினையும் காணும் பெற்றவர்கள் இச்சிறு தொகையினை மனமுவந்து, அளிக்கிறார்கள். புதிய இடம் , புெற்று, கட்டிடம் அமைக்க வேண்டி ஆண்டில் 1981. அத்தொகைகளை 100, 50 ஆக உயர்த்தியுள்ளோம் அதே நிலை ஆறு ஆண்டுகள் கழித்தும் இருந்து வருகிறது. வேறு நன்கொடைகள் வாங்குவதே இல்லை.