பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. இவ்வாறு பலவகையில் அரிதில் முயன்ற பொருளைக் கொண்டு, வீட்டு வசதி வாரியம் அளித்த புதிய நிலத்தில் 1974ல் கட்டிடம் தொடங்னோம். ஒருபுறமாக அமைக்க ஏற்பாடு செய்த கட்டிடத்தினை, பக்கத்து நிலத்துக்காரர் வீணாகத் தலையிட்டு நீதிமன்றம் வரை சென்று வழக்காடிய தால் நிறுத்தினோம் (அவர் தற்போது அந்தமனியினை விற்க இன்று அதுவேறு ஒருவருக்குச் சொந்தமாகியுள்ளது. அந்த மனையினையும் எங்களுக்கு வாங்கித் தருமாறு அரசாங்கத்துக்கு முறையிட்டோம்; எனினும் அது கைகூட. வில்லை) பிறகு வடக்குப் பக்கத்தில் இரு கட்டிடங்களை, இடையில் திறந்தவெளி அரங்கத்தோடு அமைக்கத் திட்ட மிட்டு 1975ல் கட்டிமுடித்தோம். அக்கட்டடம் முடிந்ததும் அந்த அரங்கத்தில் முதன்முதலாக காஞ்சி காமகோடி பீடாதிபதி அவர்கள் மூன்று நாள் தங்கி அன்பர்களுக்கு அருளாசி வழங்கியதோடு எங்கள் பள்ளியும் வளர. வாழ்த்தினர். அந்த மூன்று மாடிக் கட்டிடத்தில் இன்று நூல். நிலையமும் பிறவகுப்பறைகளும் உள்ளன. திறந்த வெளியரங்கில் பல கூட்டங்களும் நாடகங்களும் கலை. நிகழ்ச்சிகளும் நடைபெறுவதை யாவரும் அறிவர். பள்ளி வளர வளர இடம் தேவை அதிகமாயிற்று, மேநிலைவகுப்பிற்கு 1977ல் இசைவு பெற்றபின் அதற்கென விரிந்த ஆய்வுகளங்களும் வகுப்பறைகளும் தேவைப்பட்டன. மாணவர் தொகையும் ஆயிரத்தைத் தாண்டி விட்டது. ஆசிரியர்கள் ஐம்பத்து ஐவருக்கு மேல் பணியாற்றினர். (அமைந்தகரை செனாய்நகர் எல்லையில் 1968ல் முதலில் தொடங்கிய பள்ளியோ அதே மூன்றாம் வகுப்பு அளவில் நின்றது. எனினும் அங்கும் மாணவர் 200 பேருக்கு மேலாக ஆசிரியர் பதின்மர் பணியாற்றத் தொடங்கினர்). எனவே வேறு புதியூகட்ட்டம் அமைக்க 1977ல் எண்ணினோம், அதே வேளையில் எங்களுக்குப் புதிய இடம் வேண்டி வீட்டுவசதி வாரியத்தை அணுக அவர்கள் 77மனையினை ஒதுக்கி, அதற் கென நான்கில் ஒருபகுதியாக இரண்டரைலட்சம் கட்டச்