பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& I. சொன்ன்ார்கள். அந்த இடத்துக்கு 1977ல் அத்தொகை, கட்டிய போதிலும் 1981 ஏப்ரலிலேதான் அதில் செயல்பட முடிந்தது. அதுபற்றித் தனித் தலைப்பில் மற்றொரு பகுதி இந்நூலில் இடம் பெறுகின்றது. அந்த இடம் பெற, நாங்கள் பட்ட அல்லல் பெரிது; விரிவாகப் பின் வருகிறது. 1977ல் புதிய கட்டிட்ம் பற்றி நினைக்கும் போது நெஞ்சு நடுங்கிற்று. எனினும் நான்கு மாடிக் கட்டிடம் அமைக்க வரைப்படம் எழுதி நகாரண்கழக இசைவினையும் பெற்றோம். பணத்துக்கு எங்கே போவது? எனது நூல்களை விற்பனை உரிமைபெற்ற பாரி நிலையத்து உரிமையாளர் செல்லப்பர் அவர்கள் சிறிது முன்பணமாக கை கொடுத்து உதவினர். நல்லவேளை திருவாங்கூர் வங்கி அப்போது எங்கள் பள்ளியின் எதிரில் இருந்தது. அவர்கள் உதவ வலிய முன் வந்தனர். எங்கள் மாணவர் சம்பளங்களையெல்லாம் வசூல் செய்து, ஆசிரியருக்கும் பகிர்ந்தளிக்கும் மற்றொரு பெரிய வங்கி நாங்கள் வேண்டியும் உதவ முன்வரவில்லை. ஆயினும் தி ரு வ ா ங் கூ ர் வங்கியின் மேலாளர் திரு. இராமநாதன் அவர்கள் தாமே வந்து உதவுவதாகவும் கட்டி முடிந்தபின் ஒருபகுதியினைத் தங்களுக்கு ஐந்து ஆண்டு களுக்குத் தரவேண்டுமெனவும் கேட்டனர். நாங்களும் இசைந்தோம். வீட்டு வசதி வாரியமும் அந்த நிலத்தின் மேல் கடன் வாங்க இசைவு தந்தது. எனவே திருவாங்கூர் வங்கி இலட்சத்துக்கு மேலாகக் கடன் கொடுத்தது. மற்றும் சில நண்பக்கள் கைமாறுதலாக அவ்வப்போது சில சில ஆயிரங் களை என் பொறுப்பில் தந்தனர். அவற்றை முலமாக வைத்து எப்ப்டியோ 1978 பிப்ரவரியிலி புதிய நன்கு மாடிக் கட்டடத்தைத் தொடங்கினோம். இறையருளால் நல்ல படியே 1979 -80ல் அக்கட்டடம் முடிய, அதில் மூன்று List LääGojšć5lb (Physics, chemistry and biology) sawflgä தனியே சிறந்த வகையில் ஆய்வுக்களங்களை அமைத்ததோடு ஒரு பெரிய மண்டபத்தையும் மேலே வகுப்பறைகளையும் அமைத்துக் கொண்டோம். கீழே பெரும் பகுதியைத் தி.தி.-6