பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 திருவாங்கூர் வங்கிக்கு முன்கொடுத்த வாக்குப்படியே ஐந்தாண்டுகளுக்கு வாடக்ைக்கு விட்டோம். சில பகுதிகளில் எங்கள் பள்ளியின் கூட்டுறவுப் பண்டகசாலை, நூல்விற்பனை நிலையம், சிற்றுண்டிச்சாலை முதவிய அமைய, ஒர் இடம் சிக்கலை உண்டாக்கிவிட்டது. அதுவும் நிதிமன்றம் வரையில் சென்று பின் முடிந்துவிட்டது. எப்படியோ விழுந்து எழுந்து' அக்கட்டடத்தைக் கட்டி முடித்துப் பெருமூச்சு விட்டேன். பயிலும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இது பெரும் மகிழ்வைத் தந்தது. 1977ல் புதிய இடம் பெற வாய்ப்பு இருந்தமையால், அடுத்த ஆண்டு முதல் (1978) ஆண்பிள்ளைகளையும் மேல் வகுப்பில் சேர்க்க முடிவு செய்தோம். வள்ளியம்மாள் பள்ளி பெண்களுக்கெனவே அமைந்த ஒன்று; ஆண்பிள்ளைகளை ஐந்தாம் வகுப்பு வரையில்தான் சேர்த்தோம். 1978ல் ஜூனில் புதிய இடத்தில் கட்டடம் கட்டித் தனியாக ஆறாம் வகுப்பில் ஆண் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு ஏற்பாடு உள்ளது என் முன்னரே பெற்றோருக்கு அறிக்கை விடுத்தோம். எனினும் எதிர்பாராத தேவையற்ற வகையில், தடங்கள் ஏற்பட்டமையின் புதிய இடத்தில் கட்டடம் தொடங்க இயலவில்லை. ஆனால் நாங்கள் பெற்றொருக்குக் கொடுத்த வாக்கை மீறுவதற்கில்லை. எனவே இங்கேயே ஆறாம் வகுப்பில் ஆண்பிள்ளைகளைச் சேர்த்தோம். ஆண்டுதோறும் புது இடத்தில் கட்டிடம் வரும் வரும்' என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மேல் வகுப்புகளிலும் ஆண் பிள்ளைகள் பயிலலாயினர். பத்தாம் வகுப்பு வரையில் அவர்கள் இடம் பெற்றனர். 1981ம் ஆண்டுத் தொடக்கத் திலேயும் அந்த இடத்தில் ப்ள்ளி தொடங்க நம் தமிழகக் கல்வித் துறையினரின் அனுமதி வேண்டினோம். அவர்கள் ஏதோதோ காரணம் காட்டி, அடுத்த ஆண்டு தொடங்கலாம் என்றனர். 1980ல் செய்தித் துறை அமைச்சர் திரு. R. M. வீரப்பன் அவர்கள் பொங்கல் விழாவிற்குத் தலைமையேற்ற போது, நாங்கள் மாநிலக் கல்வித் துறையில் இணைய