பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினர். அவர் வழியாகவே விண்ணப்பம் அனுப்பியும் எல்லா ஏற்பாடுகளையும் செய்தும் 'இல்லை என்ற பதில்தான் வந்தது. இது எங்களுக்கு மூன்றாவதுமுறை அனுபவம். நம் தமிழகக் கல்வித்துறை யினருக்கு நான் என்ன கெடுதி செய்தேனோ தெரியவில்லை. தகுதி, வசதி, குறைந்த இடங்களிலெல்லாம் பள்ளி நடத்த அனுமதி வழங்கும் துறையினர் எல்லாத் தகுதிகளும் அமைத்த எங்களுக்கு அன்று அனுமதி வழங்கமறுத்தது ஏனோ அறியேன். அடுத்த ஆண்டிலே அங்கே தொடங்க, கட்டடத்துக்கு விண்ணப்பம் இட்டு ஆறு திங்களாகியும் நகராண்கழக ஒப்புதல் பெறவில்லை. விரைவில் பெற்று கட்டிடம் தொடங்கி அடுத்த 1982 ஜூனில் ஆண்பிள்ள்ை களுக்கு புதிய இடத்தில் வகுப்புகளைத் தொடக்க வாய்ப்பு இருக்கும் என நினைத்தோம். ஆயினும் மத்திய கல்விக் குழுவின் கீழ் உள்ள பள்ளியின் அங்கமாக அமைப்பதா அன்றி மாநிலக் கல்விக் குழுவோடு பொருந்துவதா என்பதை முடிவு செய்யவில்லை. மறுபடி விண்ணப் பித்தாலும் மாநிலக் கல்வித் துறை என்னபதில் தரும் என்பது. ஐயமாக உள்ளது. எப்படியும் ஆண்களுக்குத் தனியாகப் புதிய இடத்தில் அடுத்த ஜூனில் வகுப்புகள் தொடங்கப் பெறும் என நம்பினோம். இத்துணை ஏற்பாடுகள் செய்தபோதிலும் குறைகள் இல்லாமல் இல்லை. பிள்ளைகள் பகலில் உண்பதற்கென ஓர் இடம் ஒதுக்கப் பல முயற்சிகள் செய்தும் பயனில்லை. பெற்றோர் அதற்கெனத் தனிக்கட்டணம் மாதம் ஐந்தோ பத்தோ கூடத் தருவதாகச் சொன்னார்கள். ஆயினும் அது இதுவரை அமையவில்லை. தென் மேற்கு கோடியில் அடித்தளம் அமைக்கப் பெற்ற இடத்திலாயிலும் வடபக்கம் திறந்த நீண்ட வெளியிலாயினும் அமைக்க முயன்று வரைப் படங்களும் (Plan) அனுப்பினோம். விரைவில் இசைவு பெறுவோம் என நம்பினோம். எனினும் அப்போது பயன் விளையவில்லை. தற்போது இரண்டும் நிறைவுற்றுள்ளன.