பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பள்ளிக்கெனத் தேவையான நூல்கள் குறிப்பேடுகளைத் தனியாக வாங்கி மாணவர்களுக்கு அளித்து வந்தோம். 1980 - 81ல் அதற்கென மாணவர் கூட்டுறவு விற்பனைக் களம் அமைத்தோம். எனினும் அது நன்கு செயல்படாது நிற்கின்றது. பின் தக்க ஏற்பாடுகள் செய்து செயல்பட்டு, மாணவர் அதன் வழியே பயன்பெற வாய்ப்பினை அளிக்க ஏற்பாடுகள் செய்ய முயன்றும் பயன் இல்லை. இளங்குழந்தைகளும், பெற்றோரும் ஆசிரியர்களும் பள்ளியில் உள்ளபோது, பசிக்கும் வேளையிலும் சோர்வுறும் இடைவேளையிலும் பயன்படும்படி ஒரு சிற்றுண்டிச் சாலையினை நிறுவத் திட்டமிட்டோம். புதுக் கட்டடம் கட்டத் தொடங்கிய நாளிலேயே அந்த முயற்சி மேற் கொள்ளப் பெற்றது. அதற்கெனப் பலர் முன்வந்தனர். ஒருவர் பலமுறை வந்து மன்றாடினார். நாங்கள் மறுத்தோம். எனினும் தான் முன் நிற்பதாக அறிமுகமான அரசாங்க உயர்பதவியில் இருந்த ஒரு பெரிய மனிதர் கூறி அவருக்கு ஒரிடம் ஒதுக்கித் தருமாறு வேண்டினர். எனவே ஓரிடத்தை ஒதுக்கி வள்ளியம்மாள் பள்ளி டீகடை" அல்லது "சிற்றுண்டிச்சாலை’ என்ற பெயரில் பிள்ளை களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் அதை நடத்த வேண்டும் என்று ஒப்புதல் கடிதம் தந்தோம். மேலும் அதற்கு வீட்டு வசதி வாரியமும் நகராண்கழகமும் இசைவு தந்த பிறகே அதைத் தொடங்க வேண்டும் எனவும் கூறினோம். ஆனால் அவர் நேர்மாறாக வேறு பெயரில் பெரிய உணவுச் சாலையாகவே மாற்றி, பிள்ளைகளுக்குப் பயன்படாவகையில் பொது கேப்பாக மாற்றிவிட்டார். உடனே நாங்கள் நகராண் கழகத்துக்கும் போலிசுக்கும் பல முறை விண்ணப்பித்தும் பயன் இல்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். விரைவில் நல்ல முடிவினை எதிர் பார்த்தோம். அவருக்கும் நீரும் மின்சாரமும் வழங்க வேண்டும் என வழக்குத் தொடுத்தார். கீழ் மன்றத்திலும் மேல் மன்றத்திலும் அவர் வழக்கு தள்ளப் பெற்றது.