பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 முடிவில் முன் ஒப்பந்தப்படியே, எங்கள் வள்ளியம்மாள்' பெயரிலேயே நடத்துவதாகவும் பிள்ளைகளுக்கும் ஆசிரியர் களுக்கும் சலுகை தருவதாகவும் கூறினர். அப்படியே அது இன்று நடைபெறுகிறது. எங்களுக்கு உதவி செய்த திருவாங்கூர் வங்கியினைப் பள்ளியிலேயே நடத்த அரசாங்க நகராண்கழகம், பெருநகர் வளர்ச்சிக் குழுமம், வீட்டுவசதி வாரியம் அனைத்தும் இசை வளித்தன. எனவே 1979 நவம்பர் முதல் அது நம் பள்ளிக் கட்டத்திலே நடைபெறுகின்றது. மாணவர் அனைவரும் தங்கள் சம்பளத்தினை வங்கியிலேயே கட்டிவந்தனர். ஆசிரியர்களும் தங்கள் ஊதியத்தினை வங்கியிலேயே பெறு கின்றனர். எனவே வங்கி எங்கள் பள்ளியின் ஒர் அங்க மாகவே அமைகின்றது. மேலும் எங்கள் வளர்ச்சிக்குத் தேவையான கடன்களை வேண்டும்போது உதவி முன் நிற்கின்றது. பெற்றோர்கள் தங்கள் வேலைகளுக்கு இடையூறு இல்லாமல் காலை 8மணி முதல் சம்பளங்களைச் செலுத்தலாம். ஞாயிற்றுக்கிழமையிலும் வங்கி செயல்படுவ தால் அன்றும் சம்பளம் கட்ட வசதியுண்டு. சில பெற்றோர் கள் தங்கள் கணக்கினை வங்கியில் வைத்து கொண்டு தொடர்ந்து திங்கள்தொறும் முதல் நாளில், பிள்ளைகளின் பள்ளிச் சம்பளத்தைத் தங்கள் கணக்கில் இருந்து எடுத்துப் பள்ளிக்கணக்கில் மாற்ற நிரந்தர இசைவினைத் தந்துள்ள னர். இது மிக்க நன்மையுடையதாக உள்ளது. எனவே பலவகையிலும் நாங்கள் பெற்றோர் மற்றோர் உடன் துணையால் நரள்தொறும் வளர்ச்சியடைந்து வருவதை எண்ண மகிழ்ச்சி பிறக்கின்றது. எனினும் திருவாங்கூர் வங்கியினர் ஐந்தாண்டுகள் கழித்து, தாங்கள் சொன்னபடி வாடகையை உயர்த்தித் தர மறுத்தனர். சுற்றுப்புற நிலைக்கேற்ப, உயர்ந்த வேண்டும் என்று ஒப்புதல் தந்தும், மறுத்து ஓரளவு உயர்வு தர நிற்கின்றனர். நாங்கள் குறித்தபடி உயர்த்த வேண்டும்