பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 களில் திடீரென அரசாங்க உத்தியோகமோ வேறுபணியோ கிடைத்தால் அவர்கள் இதைவிட்டுச் செல்லுகின்றனர். விதிப்படி இரண்டுமாத சம்பனத்தைத் தந்து விடுகின்றனர். சட்டம் அப்படி? அவர்கள் தொடக்கத்தில் ஆண்டு முழுவ திலும் விடுவதில்லை எனத் திட்டமாக எழுதிக் கொடுத் திருந்த போதிலும் இவ்வாறு இடையில் செல்லுவது வழக்க மாகிவிட்டது. எனினும் நாங்கள் உடனுக்குடன் தக்க வசதி செய்து பிள்ளைகள் நலமும் பாடங்களும் கெடாத வகையில் பார்த்துக் கொள்ளுகிறோம். ஆண்டுதொறும் அதற்கென அதிகமாகவே நான்கு ஆசிரியர்களை நியமிக்கி றோம். எப்படியாயினும் பயிலும் பிள்ளைகள் நலமே எங்கள் நலம்’ என்ற குறிக்கோளிலேயே நாங்கள் செயலாற்றி வருகின்றோம். பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க வரும் பெற்றோர் களும் மாணவர்களும் பயிலும் மாணவர்தம் பெற்றோரும் எல்லாவகையிலும் எங்களுக்கு ஊக்கமூட்டி வருகின்றனர். எனினும் ஒரு சிலர் நடந்து கொள்ளும் முறை எங்களுக்கு வேதனையை மூட்டுகிறது. கூடியவரையில் அத்தகைய களைகளை அவ்வப்போது களைந்தெடுத்து, நற்பயிராகிய மாணவர் நலத்தினை உணர்ந்தே செயலாற்றி வருகின் றோம். இவ்வாறு பலவகையில் அன்னையின் பேரால் அமைந்த பள்ளியில் 'தக்க இன்ன தகாதன இன்னவேன்று ஒக்க ஆராய்ந்து மாணவர் வாழ்வே எங்கள் வாழ்வாதக் கருதி நாங்கள் செயலாற்றி வருகின்றோம். பலர் இதை விாைவில் மகளிர் கல்லூரியாக்க வேண்டும் என விரும்புவர். பார்வையிட்ட பெரியவர்களும் இதன் நிலை, அமைப்பு ஆய்வுகளம் முதலியன கண்டு இது விரைவில் ஒரு கல்லூரி யாகும்’ என வாழ்த்திச் சென்றுள்ளளர். கடந்த நாட்களில் பள்ளியினைப் பார்வையிட்ட தமிழக அமைச்சர் பலரும் பிற பெரிய்வர்களும் பல அரசாங்கக் கல்லூரிகளில் இல்லா வகையில் இங்கே ஆயுவுகளங்களும் நூலகமும் அமைந்துள்ள மையைப் பாராட்டிப் பேசினார். அவர்தம் பேச்சுகள் பள்ளி மலரில் இடம் பெற்றுள்ளன.