பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 வருங் காலத்தில் இன்னும் என்னென்னவோ செய்ய ஆசையும் ஆர்வமும் உண்டு. எண்பது கோடி நினைந்து எண்ணுவன என்ற வாக்கியப்படி எண்ணிக் கொண்டே இருக்கின்றேன். எழுபத்து மூன்று வயதின் எல்லையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நான், அந்த எண்ணங்களை யெல்லாம் செயலாக்க முடியுமா என்ற உள்ளுணர்வும் ஒரு பக்கம் உந்துகிறது. பெரியவர்கள் - நல்லவர்கள் உடன் துணையால் ஆவன காண முயல்வேன். இந்நூல் வெளி வரத் தூண்டிய அன்பர்கள், பெரியவர் கள், பள்ளியின் பெற்றோர்கள், மற்றவர்கள் அனைவருக்கும் என்ற நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவ்வப் போது பள்ளி விழாக்களிலும் பிற நிகழ்ச்சிகளிலும் எடுத்த புகைப்படங்களில் சில அட்டையிலும் சில உள்ளே எட்டு பக்கங்களிலும் இடம் பெற்றுள்ளன. அப்படியே அந்த நல்லவர்தம் பள்ளி பற்றிய கருத்துக்கள் சிலவும் கடைசியில் சேர்க்கையாகவுள்ளன. இவை எங்கள் பள்ளிப் பாதையின் மைல் கற்களாகும். என் அன்னையின் பெயரால் அமைந்த அறம் மேலும் சிறக்க வாழ்த்தியருளுமாறு அன்னவரையும் வேண்டிக் கொள்ளுகிறேன். குழந்தைகள் தினமாகிய நாட்டின் நல்ல் தலைவர் நேரு அவர்கள் பிறந்த நன்னாளில் இந்த நூல் வெளிவருகின்றது. பள்ளிப் பிள்ளைகளையும் இளஞ் செல்வங்களையும் பாராட்டிப் போற்றும் அப் பெருமகனார் நாளில் இந்நூல் மக்கள் கையில் சேர்வது பொருத்தமாகும் என எண்ணு கிறேன். - மீண்டும் அனைவருக்கும் என் வணக்கத்தையும் நன்றியினையும் தெரிவித்து அமைகின்றேன். வள்ளியம்மாள் கல்வி அறம் பணிவுள்ள சென்னை-102, ; 14. 11. 86. அ. மு. பரமசிவானந்தம்