பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஆம்! பள்ளி மலரைக் குறிக்க மறந்து விட்டேன். பிள்ளைகள் பேச்சுத்திறனை அறிந்து வாரந்தோறும் கூட்டடங்கள் அமைத்து அவர்கள் அறிவினை வளர்ப்பதைப் போன்று அவர் தம் எழுத்துத் திறனைக் காட்ட மலர், தொடங்க நினைத்தோம். கடத்த பதினொரு ஆண்டுக ளாக மலரினை ஆண்டுவிழாவின்போது வெளியிடுகிறோம். அதில் வரும் ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மும்மொழி யிலும் குழந்தைகள் எழுதும் கட்டுரைகள், பாட்டுகள், பிறபடங்கள் முதலியன அவர்தம் திறனையும் தெளிவையும் நன்கு காட்டுகின்றன. அம்மலரிலே ஆண்டின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இடம் பெறும். ஆண்டுதொறும் மலரினைத் தக்கவர் ஒருவர் வெளியிட்டு, அதில் பிள்ளைகளின் திறன் விளங்குவதையும் எடுத்துரைப்பார். பல்வேறு போட்டி களிலும் வெளியிடங்களில் எங்கள் குழந்தைகள் பங்கு கொண்டு வெற்றி பெறுவர் விளையாட்டிலும் சரி. கட்டுரை கதை கவிதையாயினும் சரி, வேறு ஒவியம் நொடி வினா முதலியனவாயினும் சரி, எங்கள் பிள்ளைகள் கலந்து கொண்டு பரிசு பெறாமல் வருவதில்லை. அவைபற்றியெல் லாம் மலரில் சுட்டுதல் மரபு. இவ்வாறு எல்லா வகையிலும் எங்கள் பள்ளி-நம் பள்ளி-வள்ளியம்மாள் பள்ளி வளர்ந்து வருகிறது. 1968-ல் நின்ற இடத்தையும் 1986-ல் நிற்கின்ற நிலை யினையும் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்கிறேன். சாதாரணமாக வாழ்ந்த தனி ஒருவனால் எவ்வாறு இந்தப் பெரும் பணியைச் செய்ய முடிந்தது என எண்ணி எண்ணித் திகைத்து நிற்கின்றேன். என் அன்னையின் மறைந்தருளும் நல்வாசியும் இறைவனின் பேரருளும் என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. அத்துடன் பல பெரியவர்கள்-அறிஞர்கள்-தலைவர்கள் நல்வாழ்த்தும் இணைந்து நிற்கின்றது. பெற்றோர்கள் மாணவர்கள் பொதுமக்கள் இவர்கள் ஒத்துழைப்பும் உடன் கலந்து சிறக் கின்றது. ஆம்! இத்தகைய நல்ல துணையினாலேதான்