பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைகளும் நாமும் பழங்காலத்தில் குரு குல வாசம்’ என்ற முறை நம் நாட்டில் இருந்ததை யாவரும் அறிவோம். ஒரே ஆசிரியரின் கீழ் இருந்து ஐந்து வயது முதலோ அதற்கும் சற்றுப் பிந்தியோ இருந்து, தக்க வயது வரும் வரையில்-பதினாறு கடக்கும்வரை என்று கொள்ளலாம்-பயின்று எல்லாக் கலைகளையும் கற்று, வெளியேறுவது மரபு. ஆயினும் அந்த வகையில் எல்லாப் பிள்ளைகளும் பயின்றார்கள் என்று சொல்லுவதற்கில்லை. மேலும் பயின்றவர்கள் வெறும் பாடங்களை மட்டும் பயின்றதோடு அமையாது வாழ்க்கை யின் எதிர் காலத்திற்கு வேண்டிய சகல கலைகளையும் கற்றார்கள் என அறிகிறோம். அரச குமரர்களாயின் யானையேற்றம், குதிரையேற்றம் போன்ற போர்ப் பயிற்சி களையும் பயின்றார்கள் போலும். எனவே அக் காலத்தில் நல்லாசிரியர்கள் எல்லாத் துறையிலும் வல்லவர்களாகி இருந்ததோடு, ஒழுக்க சீலர்களாகவும் தெளிந்த அறிவும் தெய்வ பக்தியும் உடையவர்களாகவும் இருந்திருப்பர். அதனால் பயிலும் மாணவர்கள் மட்டுமன்றி மற்றவர்களும் பெற்றவர்களும்கூட அப் பேராசிரியர்களிடம் நன்மதிப்பு வைத்திருந்தார்கள் என அறிகிறோம். தன்னைப் பாடிய பரணரிடம் தன்மகன் குட்டுவன் சேரலையே ஒப்படைத்த செங்குட்டுவன் வரலாறு நாடறிந்த ஒன்று. அப்படியே பல செல்வர், அரசர் வீட்டுப் பிள்ளைகளும் ஏழைப்பிள்ளை களும் தக்க குருவினிடம் இருந்து இருஎன இருந்து சொல்லெனச் சொல்லி' என் நன்னூல் கூறுவது போன்று பயின்று, அனைத்திலும் வல்லவர்களாக விளங்கினார்கள். பிள்ளைகளும் ஆசிரியர்களுக்குப் பயந்து பயின்று வந்தார்கள்.

  • ஆசிரியர் ஊருக்கு எப்படி குருவாய் வழிகாட்டியாய்நல்லாசிரியனாய்-ஒழுக்கசீலனாய் இருந்தார் என்பதைக்