பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 'கோல்டுஸ்மித்' என்ற ஆங்கில ஆசிரியர் Village School master ஆகப் படம் பிடித்து காட்டுகிறாரே! அத்தகையவர் எங்கே இன்று? இக் காலத்திய நிலையே வேறு! நல்லாசிரியர் கள் நாட்டில் கிடைப்பதரிது. அங்கொன்றும் இங்கொன்று மெனத் தனித்தனியே வெவ்வேறு பாடங்களைப் படித்துஒரு சிலர் படிக்காமலேயும்கூட அதிலதில் வல்லவரெனப் பட்டம் பெற்று ஆசிரியர்கள் வருகிறார்கள். எனவே பல வற்றைப் பயில வேண்டிய மாணவர் பல ஆசிரியர்களிடம் பயில வேண்டியுள்ளது. அதற்கேற்றாப் போலவே பண்டைக் குருகுலவாச முறைமாறிப் பள்ளிக்கூடமுறை புகுத்தப்பட்டது போலும். இப்போதும் கிராமங்களிலும் . ஏன்.நகரங்களில் சில இடங்களிலும் ஐந்தாம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர் ஒரு வகுப்பில் முழுக்கமுழுக்கக் கவனம் செலுத்துவதைக் காண்கிறோம். அப்போதும் ஆண்டுக்கொரு முறை ஆசிரியர் மாற வேண்டியுள்ளது. குழந்தை வகுப்பு முதல் கல்லூரியின் முன் வகுப்பு வரை(+2) சுமார் 14 ஆண்டுகள் பயிலும் பிள்ளைகள் பல ஆசிரியர்களைச் சந்திக்க நேரிடு கின்றது. அதனால் அவர்கள் எவருடைய சாயலாக எதிர் காலத்தில் விளங்குவார்க்ள் என்று சொல்ல இயலாது. பழங்காலத்தில்--ஏன் இந்த நூற்றாண்டின் தொடக்கத் திலேயே "நான் இன்னார் மாணவன்’ என்று பெருமையோடு சொல்லக் கூடிய பரம்பரை இருந்துதான் வந்தது. இன்று உயர்ந்து 'டாக்டர் பட்டம் முதலிய ஆய்வுப்பட்டங்களைப் பெற ஓரிருவர் தம் மேல் ஆசிரியர் வழி காட்டப் பயில் கின்றார்கள் என்றாலும், அவர்களும் ஆசிரியரிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுவதில்லை. அக் காலத்தைக் காட்டிலும் இன்று அறிவியலும் பிறவும் வளர்ந் துள்ளன என மதிப்பிடும் இந்த நாளில், அக் காலத்தில் இருந்த அமைதியும் மன நிறைவும் எளிய வாழ்வும் அதற் கேற்ற சூழலும் இல்லையே. நாட்டுக் கல்வியை நாளுக் கொருமுறை மாற்றும் நாகரிகத்தில் வாழும் நமக்கு, பண்டைக் குருகுலவாசம் எங்கே விளங்கப் போகிறது! நானும் உலகத்தோடு ஒட்ட ஒழுக வேண்டியிருந்தமையின்