பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இத்தகைய பள்ளிகளையே இன்று நடத்தி வருகிறேன். இன்றேல், பணம் இன்றேனும், அரசாங்க இசைவு இருக்காதே! எங்கள் பள்ளி 1968 ஜூன் 26ல் எங்கள் வீட்டிலேயே தோன்றியது எனக் கூறினேன். அப்போது மூன்று பிள்ளை களே சேர்ந்தார்கள். நாங்கள் தலைமையாசிரியர் உட்பட (இன்று உள்ளவர்களே) வேறு நான்கு பெயருடன் ஐந்து ஆசிரியர்களை நியமித்து அன்று இருந்த அரசாங்கச் சம்பள நிலையில் ஊதியமும் கொடுத்தோம். ஆண்டுக் கடைசியில் மாணவர் எண்ணிக்கை நாற்பத்தாறாகப் பெருகிய போதிலும் எங்களுக்கு அந்த ஆண்டும் தொடர்ந்து சில ஆண்டுகளும், ஆண்டுதொறும் பல ஆயிரம் நட்டத்தில் நடத்திச் சென்றன. எனினும் சளையா உள்ளத்தோடு அண்ணாநகரில் 1970 பள்ளி தொடங்கினோம். அன்று முதல் பிள்ளைகள் இரண்டிடங்களிலும் எண்ணிக்கையில் வளர்ச்சியுற்றே வருகின்றனர். (1981-82ல்+2 உயர் வகுப்பு களிலும் பிற மேல்வகுப்புகளிலும் மத்திய கல்வி முறை யின் அதிகமான பாடங் கருதியும் உயர்ந்த மதிப்பெண் பெறு நிலையிலும் சிலர் இடையிலும்) பத்தாம் வகுப்புத் தேறிய பின்னும், சில ஆண்பிள்ளைகள் ஆறாம் வகுப்பிலும் விட்டுச் சென்ற காரணத்தால் சற்றே எண் குறைந்துள்ளமை மாணவர் தம் எண் பட்டியலில் காணலாம்) நாங்கள் தேர்வு முறையிலேயே மாணவர்களைச் சேர்ப்பதாலும் எந்த நன்கொடையையும் எதிர்ப்பார்த்துச் சேர்க்காததாலும் பிற கட்டுப்பாடுகளிலும் இந்த அளவில் மாணவர்கள் எண்ணிக்கையை (1500-350-250) நிறுத்த முடிகின்றது. இன்றேல் இன்னும் சில ஆயிரம் கூடி இருக்கலாம். இதனால் சில பெற்றோர்கள்-உயர் அதிகாரிகள் ஆகியோருடைய மனக் கசப்பையும் வேறுபட்ட செயல்களையும் நாங்கள் சந்திக்க நேரினும் சளைக்காது கொள்கை அளவில் நிற்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்ளுகிறோம். மேலும் மேல்வகுப்பு களில் -9க்கு மேல் - கூடியவரையில் வெளியிலிருந்து வரும்