பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 பிள்ளைகளை நாங்கள் சேர்ப்பது இல்லை, மற்றும் இதைப் பெண்கள் பள்ளியாகவே கொண்டுவர நினைத்ததால் 1977 வரை ஆண்பிள்ளைகள் 5ம் வகுப்பிலே வேறு பள்ளிக்குச் செல்லுமாறு அனுப்பிவிடுவோம். 1980ல் நாங்கள் புதிய இடம் பெற்றபோது, அதில் ஆண்களுக்குத் தனியாக வகுப்புகளை அமைக்கலாம் என நினைத்தமை யால் அதுபோது தொடங்கி ஆண்பிள்ளைகள் 10வது வரை இன்று பயில்கின்றனர். எனினும் பலருக்கும் இது வெளிப் படையாகத் தெரியாததாலும் சில தமிழக அரசின் இலவசப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்புவதாலும் ஐந்தாம் வகுப்பு முடிந்ததும் வெளியேறு கிறார்கள். உரிய முறையில் அவர்கள் உரிய காலத்தில் மாற்றுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் மகிழ்ச்சியோடு விடைகொடுத்து அனுப்புவோம். ஆயினும் சில பெற்றோர் கள்-நன்றாகப் படித்தவர்கள் கூட-கால எல்லை கடந்தும் வேறு காரணங்கருதியும் உரிய காலங் கடந்து, எங்களுக்குத் தொல்லை தருவது உண்டு. எனினும், நாங்கள் எங்கள் வரையறுத்த-அச்சிட்டு வழங்கியுள்ள கொள்கையில் நிலைத்து நிற்கும் முயற்சியில் தலை நின்று ஓரளவு வெற்றி யும் பெற்றுவருகிறோம். ஆயினும் அதனாலும் சில பெரிய வர்கள் தூற்றுதலுக்கும் கொடுமைக்கும் ஆளவதும் உண்டு. என்செய்வது? அவற்றையும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். பள்ளியில் பயிலும் பிள்ளைகளுள் பெரும்பாலோர் தொடர்ந்து பள்ளி இறுதி வகுப்புவரையில் பயின்று வருகின்றனர், ஒரு வேளை வேறு ஊர்களுக்கு மாற்றப் பட்டோ, வேறு இடங்களுக்குக் குடியேறிச் செல்கிற போதோ பிள்ளைகளை மகிழ்வோடு வழி கூட்டி முறைப்படி அனுப்பிவைப்போம். சில பிள்ளைகள் எங்களைவிட்டுப் பிரிய மனமில்லாமல் திரும்ப இங்கேயே வந்து சேர்வதும் உண்டு. எல்லாப் பிள்ளைகளும் பிள்ளைப் பாசத்தோடு எங்கள் ஆசிரியர்களிடமும் முதல்வரிடமும் எங்களிடமும்