பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 பழகும் போது நாங்கள் எங்களை மறக்கிறோம். இளங் குழந்தைகளின் இன்முகம் நோக்கி மகிழ்வதால் பிறக்கும் இன்பத்திற்கு ஈடு இணை உண்டோ! எங்கள் பள்ளி தொடங்கி, சென்ற ஆண்டுடன் பதினெட்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. எனவே எங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் இப்போது பள்ளியில் சேர்ந்து பயில்வதைக் காண மகிழ்ச்சி பிறக்கிறது. சில பிள்ளை களுடைய மணவிழாவிற்குப் பெற்றோர்கள் நேரில் வந்து அழைப்பதும் நாங்களும் அத்தகைய மணவிழாக்களுக்குச் சென்று கண்டு வாழ்த்தி மகிழ்வதும் மறக்க முடியாத செயல்களாகும். இரண்டரை அல்லது மூன்று வயதில் இளங்குழந்தைகள் சேர்க்கப்பெறும் போது அக் குழந்தைகள் தாயாரை விட்டுப் பிரிய மனமில்லாமல் வருவதும் அழுவதும் எங்கள் குழந்தை கள் வகுப்பு ஆசிரியர்களுக்குப் பெரும் வேலைதரும். எனினும் ஒரு சில நாட்கள் அவ்வாசிரியர்களின் தாயன்பில் திளைக்கும் அக்குழந்தைகள், பெற்றோருக்கு டாடா காட்டி வழியனுப்புவது கண்கொள்ளக் காட்சியாகும். பிள்ளைகளை ஆசிரியர்கள் அரவணைத்துப் போற்றுவதும் அவர்களை விளையாட விடுவதும் வேடிக்கைப் பாடல்களைப் பாடி மகிழ்ச்சி ஊட்டுவதும் மெல்ல மெல்லப் பல படங்களை யும் துனைக் கருவிகளையும் காட்டிப் பாடம் புகட்டுவதும் இங்கே குறிப்பிடத்தக்கன. அக்குழந்தைகள் வகுப்பிற்கு நான் செல்லும் போதெல் லாம் நான் என்னை மறப்பேன். என்னைக் கண்டவுடன் ஒருங்கே எழுந்து நின்று குட்மார்னிங் சார்', குட்ஆப்ட்ர் நான் சார் சொல்வதும் சில குழந்தைகள் வந்து கட்டிக் கொண்டு மகிழ்வதும் மழலை பேசுவதும் என்னை மறக்க வைக்கும் செயல்கள். அவர்களை வாரியணைத்து முத்தமிட்டு வாழ்த்தி வருவேன். அதே குழந்தைகள் மெல்ல மெல்லப்