பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 ஆயின்று மேல் வகுப்புகளுக்கு வரும் போது தெளிவு பெற்ற சிறந்த முறையில் அனைவருடன் பழகும் முறையும் பயிலும் முறையும் சிறக்கப் போற்றத்தக்கன. அவ்வாறே பள்ளி இறுதி வகுப்பில் பயின்று தெர்வு எழுதி, பள்ளியினை விட்டு விலகிச் செல்லும் பிள்ளைகளின் பரிவும் பாசமும் கூட மறக்கந்பாலன அல்ல. முதலாண்டு (1977 என எண்ணுகிறேன்) பத்து, பதினோறாம் வகுப்பு ஆகிய இரண்டிலும் பயின்ற மாணவர்கள் முறையே புகுமுக வகுப்பினும் (P.U C.) பட்டவகுப்பிலும் இடம் பெற எங்களை விட்டுச் சென்றனர். அவர்களை அனுப்பிய விழாக் காட்சியும் அடுத்து ஆண்டு தோறும் பனிரண்டாம் வகுப்புப் பிள்ளைகளை அனுப்பும் நிகழ்ச்சிகளும் எண்ணத் தக்கன. பிள்ளைகள் தாங்கள் ஆசிரியர்களிடம் பயின்ற முறைபற்றியும் பள்ளியில் தாங்கள் நடத்தப் பெற்ற முறை பற்றியும் பேசி, வேடிக்கை விளையாட்டுக் காட்டி, சிற்றுண்டி கொண்டு மகிழ்ச்சியோடு செல்லும் காட்சியும் மறக்க முடியாதது. அத்துடன் ஆண்டுதோறும் பள்ளிக்கென எதையாவது நன்கொடை அளித்துச் செல்லும் முறையும் போற்றுதற்குரியது. மின்விசிறி, கடிகாரம், மின்மணி, இரும்பு அலமாரி ஆகியவை அவர்கள் அளித்தவையாகும். அப் பிள்ளைகளுள், சிலர் வெளியே கல்லூரிகளில் பயிலும் காலத்து அடிக்கடி வந்து ஆசிரியார்களையும் முதல்வரையும் கண்டு வாழ்த்துப் பெற்று செல்வதும் போற்றக் கூடிய ஒன்று. அவ்வாறு எங்கள் பள்ளியிலிருந்து சென்ற மாணவி யர் எல்லாப் பெண்கள் கல்லூரிகளிலும் எளிமையாக இடம் பெறுவதோடு, அவ்வக்கல்லூரிகள் முதல் இரண்டாவது மாணவியராகப் பயின்று வருவது எங்கள் பள்ளிக்குப் பெருமை தருகின்ற ஒன்றாகும். ஒரு சிலர் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற தொழிற் பயிற்சி தரும் கல்லூரிகளிலும் சேர்ந்து அங்கும் சிறக்கக் கல்வி கற்று வருவதனையும் இங்கே காட்டுவது தவறில்லை என எண்ணுகிறேன்.